நானும் என் தனிமையும்…
மதி மறைந்த நேரத்தில்
என் தலைக்கு மேல்
மேகங்களின் ஊர்வலம்!
பரபரப்பாக எங்கோ
ஆவலாய் ஓடுகின்றன!
தேடுவதற்கு ஏதோவொன்று
அதற்குள்ளும் இருக்கிறது!
மேகத்தின் பின்னணியில்
கருநீல வானம்
கும்மிருட்டை விழுங்குகிறது!
என் தூக்கத்தை கலைக்க
தினம் தினம் வரும்
தொல்லை ராட்சசி!
நீள் இரவுகளாக கழிகின்றன!
வீட்டின் அருகே
எல்லைச்சாமி போல
இரு தென்னைமரங்கள்!
காற்றடித்தால் போதும்
கலகலவென சிரிக்கும்
ஓலைகளின் உரசல்கள்!
இரவு பகல் பாராமல்
இருமரமும் கொஞ்சல்களில்!
இவர்களின் ஸ்பரிசத்தால்தானோ
குலைகுலையாய் குழந்தைகள்!
நின்ற இடத்திலேயே
பிடித்தமான வாழ்க்கையில் அவை!
ஓலை விரல்களின் நடுவே
மின்மினிப் பூச்சிகள் போல
நட்சத்திரங்களின் தோற்றம்!
பாரதிராஜா படத்தின்
கதாநாயகி போல
கதவிடுக்கில் குறும்பாய்
தோன்றுவதும் மறைவதுமாய்!
அடடே! அடுக்குமாடி கட்டிடத்தின்
சுவரைத் தாவிக்குதித்து
மெல்ல வருகிறாள்
இம்சை அரசி- நிலா!
இன்று ஏனோ செந்நிறத்தில்!
என் மீது கோபமோ?
கோபம் மெல்ல தணிந்து
வானத்தில் தவழ்ந்து
என்னையும் ரசிக்க வருகிறாள்!
நடுநிசியில் உன்தரிசனம்
மொட்டை மாடியில்
என்வீட்டின் மேலாய்!
உலகத்தின் நாயகியே!
ஒப்பற்ற பேரழகியே!
உன்னை ரசிக்க கண்கள் கோடி!
எனக்கோ நீதானே காதலி!
பிறந்தநாள் முதலாய்
உன்னை காதலிக்கிறேன்!
ஓ! இப்போது புரிகிறது!
இதுதான் கோபமோ?
உன்னை சற்று புறந்தள்ளி
உலகத்தின் பொய்களில்
காதலென கசிந்துருகி
கழற்றிவிடப்பட்டதும்
உன்னிடமே சரணடைகிறேன்!
மன்னித்துவிடடி என்னை!
மறக்கவில்லை உன்னை!
மண்ணுக்குள் போவதவற்கள்
மானுட காதலையும்
ருசிக்கத்தான் தோன்றியது!
தோல்விகளையே தழுவுகிறேன்
மீண்டும் மீண்டும்!
தோள் கொடுக்க ஆளில்லை!
வாழ்வின் எல்லை இதுதானோவென
சூதுவாது நிறைந்த சில உறவுகள்!
உணர்வுகளை உணராமல்
பந்தாடும் பந்தங்கள்!
பலவந்தத்தின் நகர்த்துதலில்
வாழ்வின் நரக நாட்கள்!
வேற்று உலகத்தில் பிறந்து
பூமிக்குள் பிறந்ததாய்
தோன்றுகிறது மனஉணர்வு!
கருவிலேயே அழிந்திருக்கலாம்!
அல்லேல் மனநிலைகுன்றி
பிறந்திருக்கலாம்!
கவலையின்றி போயிருக்கும்!
அறிவுடன் பிறந்து
சுயவாழ்வை தொலைத்த
எண்ணற்றவர்களின் எண்ணிக்கையில்
நானும் ஒருவனாய்!
எனை மாய்க்க மனமில்லை!
நீடுதுயில் கொள்ளும்வரை
போராடத்தான் போகிறேன்!
உணர்வுகளை தொலைத்து
உயிரோடு வாழ்வது
சாகசங்களின் உச்சம்!
ஊருக்காய் வாழ்ந்து வாழ்ந்து
சொந்த உணர்வுகளையெல்லாம்
கழுமரத்தில் ஏற்றிவிட்டேன்!
ஆசைகளுண்டு ஆயிரம் கோடி!
அணுஅணுவாய் ரசிக்க
நினைத்தவை பல கோடி!
இரவின் கொசுக்கடியிலும்
கொட்டுகிறது வார்த்தைகள்!
முட்டுகிறது விம்மல்கள்!
ஆவி பிரிந்த கூடுபோல்
கட்டிலில் என் மெய்யுடல்!
உடலைவிட்டு ஊர்திரியும்
ஆவிபோல் மனம்!
எங்கெங்கோ செல்கிறது
நினைவுகளின் வழிகாட்டுதலில்!
தென்றலின் ஈரப்பத தேற்றுதலில்
தேம்பலும் விசும்பலுமாய்
முகம் புதைக்கிறேன்!
தாய்மடியாய் தேற்றுகிறது
வெட்டவெளியில்
நான் விரித்த கோரைப்பாய்!
நான்பிறந்த இப்புவியில்
உண்மையைத் தேடித்தேடி
அலுத்துப் போய்விட்டேன்!
நான் விரித்த கோரைப்பாயில்
உறக்கத்தை தழுவுகிறேன்!
ஊனுடம்பு இருக்கும்வரை
நானும் என் தனிமையுமாய்!
மதி மறைந்த நேரத்தில்
என் தலைக்கு மேல்
மேகங்களின் ஊர்வலம்!
பரபரப்பாக எங்கோ
ஆவலாய் ஓடுகின்றன!
தேடுவதற்கு ஏதோவொன்று
அதற்குள்ளும் இருக்கிறது!
மேகத்தின் பின்னணியில்
கருநீல வானம்
கும்மிருட்டை விழுங்குகிறது!
என் தூக்கத்தை கலைக்க
தினம் தினம் வரும்
தொல்லை ராட்சசி!
நீள் இரவுகளாக கழிகின்றன!
வீட்டின் அருகே
எல்லைச்சாமி போல
இரு தென்னைமரங்கள்!
காற்றடித்தால் போதும்
கலகலவென சிரிக்கும்
ஓலைகளின் உரசல்கள்!
இரவு பகல் பாராமல்
இருமரமும் கொஞ்சல்களில்!
இவர்களின் ஸ்பரிசத்தால்தானோ
குலைகுலையாய் குழந்தைகள்!
நின்ற இடத்திலேயே
பிடித்தமான வாழ்க்கையில் அவை!
ஓலை விரல்களின் நடுவே
மின்மினிப் பூச்சிகள் போல
நட்சத்திரங்களின் தோற்றம்!
பாரதிராஜா படத்தின்
கதாநாயகி போல
கதவிடுக்கில் குறும்பாய்
தோன்றுவதும் மறைவதுமாய்!
அடடே! அடுக்குமாடி கட்டிடத்தின்
சுவரைத் தாவிக்குதித்து
மெல்ல வருகிறாள்
இம்சை அரசி- நிலா!
இன்று ஏனோ செந்நிறத்தில்!
என் மீது கோபமோ?
கோபம் மெல்ல தணிந்து
வானத்தில் தவழ்ந்து
என்னையும் ரசிக்க வருகிறாள்!
நடுநிசியில் உன்தரிசனம்
மொட்டை மாடியில்
என்வீட்டின் மேலாய்!
உலகத்தின் நாயகியே!
ஒப்பற்ற பேரழகியே!
உன்னை ரசிக்க கண்கள் கோடி!
எனக்கோ நீதானே காதலி!
பிறந்தநாள் முதலாய்
உன்னை காதலிக்கிறேன்!
ஓ! இப்போது புரிகிறது!
இதுதான் கோபமோ?
உன்னை சற்று புறந்தள்ளி
உலகத்தின் பொய்களில்
காதலென கசிந்துருகி
கழற்றிவிடப்பட்டதும்
உன்னிடமே சரணடைகிறேன்!
மன்னித்துவிடடி என்னை!
மறக்கவில்லை உன்னை!
மண்ணுக்குள் போவதவற்கள்
மானுட காதலையும்
ருசிக்கத்தான் தோன்றியது!
தோல்விகளையே தழுவுகிறேன்
மீண்டும் மீண்டும்!
தோள் கொடுக்க ஆளில்லை!
வாழ்வின் எல்லை இதுதானோவென
சூதுவாது நிறைந்த சில உறவுகள்!
உணர்வுகளை உணராமல்
பந்தாடும் பந்தங்கள்!
பலவந்தத்தின் நகர்த்துதலில்
வாழ்வின் நரக நாட்கள்!
வேற்று உலகத்தில் பிறந்து
பூமிக்குள் பிறந்ததாய்
தோன்றுகிறது மனஉணர்வு!
கருவிலேயே அழிந்திருக்கலாம்!
அல்லேல் மனநிலைகுன்றி
பிறந்திருக்கலாம்!
கவலையின்றி போயிருக்கும்!
அறிவுடன் பிறந்து
சுயவாழ்வை தொலைத்த
எண்ணற்றவர்களின் எண்ணிக்கையில்
நானும் ஒருவனாய்!
எனை மாய்க்க மனமில்லை!
நீடுதுயில் கொள்ளும்வரை
போராடத்தான் போகிறேன்!
உணர்வுகளை தொலைத்து
உயிரோடு வாழ்வது
சாகசங்களின் உச்சம்!
ஊருக்காய் வாழ்ந்து வாழ்ந்து
சொந்த உணர்வுகளையெல்லாம்
கழுமரத்தில் ஏற்றிவிட்டேன்!
ஆசைகளுண்டு ஆயிரம் கோடி!
அணுஅணுவாய் ரசிக்க
நினைத்தவை பல கோடி!
இரவின் கொசுக்கடியிலும்
கொட்டுகிறது வார்த்தைகள்!
முட்டுகிறது விம்மல்கள்!
ஆவி பிரிந்த கூடுபோல்
கட்டிலில் என் மெய்யுடல்!
உடலைவிட்டு ஊர்திரியும்
ஆவிபோல் மனம்!
எங்கெங்கோ செல்கிறது
நினைவுகளின் வழிகாட்டுதலில்!
தென்றலின் ஈரப்பத தேற்றுதலில்
தேம்பலும் விசும்பலுமாய்
முகம் புதைக்கிறேன்!
தாய்மடியாய் தேற்றுகிறது
வெட்டவெளியில்
நான் விரித்த கோரைப்பாய்!
நான்பிறந்த இப்புவியில்
உண்மையைத் தேடித்தேடி
அலுத்துப் போய்விட்டேன்!
நான் விரித்த கோரைப்பாயில்
உறக்கத்தை தழுவுகிறேன்!
ஊனுடம்பு இருக்கும்வரை
நானும் என் தனிமையுமாய்!
(கடையத்தான்)
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.