குடிநீரில்
என்னென்ன தாது உப்புக்கள எந்தளவிற்கு இருக்க வேண்டும் என்ற வரையறையை பிஐஎஸ் என்ற இந்திய தரக்கட்டுப்பாட்டு
அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அலுமினியம், அமோனியா, கால்சியம், குளோரைடு,
தாமிரம், புளுரைடு, இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், நைட்ரேட் உள்ளிட்ட பல வகையான
உப்புகளும் இடம்பெற்றுள்ளன.
அந்தந்த
பகுதிகளின் மண்ணின் வளம், அங்கு நடைபெறும் தொழில்கள் ஆகியவற்றால் இந்த தாது உப்புக்களின்
செறிவு கூடுதலாகவோ, குறைந்தோ காணப்படுவது உண்டு. அமராவதி நொய்யல் ஆற்றின் படுகைகளில்
தண்ணீரில் சோடியம் குளோரைடு, பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பதால்
அவற்றை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பூம்புகார், பண்ணையூர், திருவலஞ்சுழி, கண்டியூர்பாலம், ஸ்ரீராமசமுத்திரம், கிழக்கு தவிட்டுப்பாளையம், மேக்கேதாட்டு, ருத்ரபட்டினம் உள்ளிட்ட 10 இடங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடிநீரில் அதிகப்படியான சோடியம், குளோரைடு, பொட்டாசியம், மெக்னீசியம் அளவு அதிகப்படியாக இருப்பதால் குடிப்பதற்கும், பாசனத்திற்கும் பயன்பாடற்ற நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆற்றுநீர் பயன்பாடு அதிகம் உள்ள இப்பகுதிகளில் பல்வேறு கழிவுகளால் நீர் மாசுபட்டு பயன்பாடற்று உள்ளது.

கடற்கரையோர
மாவட்டங்களிலோ குடிநீரின் தன்மை உவர்ப்பாக இருப்பதற்கு காரணத்தை அறிந்து கொள்வதற்கு
பெரிய விஞ்ஞானிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உவர்ப்பு கூடுதல், குறைவு என்ற இரு
வித்தியாசங்கள் மட்டுமே இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. சில இடங்களில் அறவே பயன்படுத்த
முடியாத அளவிற்கு தண்ணீரின் தன்மை இருப்பதும் உண்டு. காரணம் தண்ணீரில் புளூரைடின் அளவு
கூடுதலாக இருப்பதால் மஞ்சள் நிறத்துடன் பயன்பாட்டிற்கு உபயோகமற்றதாக இருக்கக் கூடும்.
குறிப்பாக
உப்பளத்தொழில் நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பகுதிகளில் இதுபோன்ற புளூரைடு வேதிப்பொருள்
மிக்க நிலத்தடி நீர் கிடைக்கப்பெறும். உப்பளம் அமைக்கும் போது அதில் உள்ள சாரம் படிப்படியாக
மண்ணில் இறங்கி நிலைப்பெற்று நிலத்தடி நீரின் தன்மையை மாற்றிவிடும். காலம் செல்லச்செல்ல
நிலத்தடி நீரின் ஊற்றுக்கண் வாயிலாக சில கி.மீ. தூரம் வரை இந்த பாதிப்பு தென்படும்.
இந்த
புளூரைடு தன்மை மிக்க தண்ணீரை பயன்படுத்துவதால் பற்களில் மஞ்சள் படிமங்கள் சேர்ந்து
காலப்போக்கில் பற்கள் நொறுங்கிவிடும். எலும்புகளில் புளூரைடு அதிகமாவதால் பல்வேறு பாதிப்புகளும்
ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. புளுரைடு படிமங்களால் சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையா புரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 30 ஆயிரம் தொழிலாளர் கள் வேலை செய்கின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது. நாட் டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தூத்துக்குடி
வஉசி கல்லூரியின் கடல்சார் மற்றும் நிலத்தியல் துறை உதவி பேராசிரியர் சே.செல்வம் என்பவர்
தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக
நிலத்தடி நீரின் தன்மை பற்றிய ஆய்வை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து 2016ம் ஆண்டில்
அப்துல் கலாம் இளம் விஞ்ஞானி விருதையும் பெற்றார். இந்த விருதை தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்
துறையின் கீழ் இயங்கும் மெரினா லேப் வழங்கியது.
அவர்
நடத்திய ஆய்வின் சாராம்சம் என்னவெனில், ஓட்டப்பிடாரம்
மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் தன்மை, புளுரைடு மற்றும்
நைட்ரேட்டின் தன்மை, விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் கண்டுபிடிப்பு உள்ளிட்ட ஆய்வறிக்கைகளை
தயார் செய்து சமர்ப்பித்தார். அதில் நிலத்தடி நீரில் புளுரைடு அளவு மிகுந்திருப்பதை
கண்டறிந்தார். இன்னும் பல பேராசியர்கள் இதுபோன்ற ஆய்வுகளை நடத்தி புளுரைடு பாதிப்பு
மிகுந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்த
புளுரைடு பாதிப்புக்கு தொழிற்சாலை கழிவுகளை மட்டுமே குற்றச்சாட்டாக பலர் முன்வைத்து
வரும் நிலையில் உப்பளங்களால் ஏற்படும் பாதிப்புகளை உணருவதில்லை. உப்பள தொழிலை பாரம்பரியாக
கடைபிடித்து வருவதால்தான் இந்த தொழிலின் பாதிப்புகள் உற்றுநோக்கப்படுவதில்லை. தொழில்
வளர்ச்சியை மறுக்க முடியாது. ஆனால் அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு வழிவகைகள்
உண்டு. தொழிற்சாலைகளை பொறுத்தவரை முறைப்படி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழியாக கழிவுகளை
உட்செலுத்தி அவற்றின் ரசாயன மற்றும் உப்பு அளவுகளை குறைக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால்
உப்பளங்களில் அதுபோன்றதான வாய்ப்புகள் மிகக்குறைவு.
உப்பளங்கள் அமைக்கப்பட்டால் அண்மையில் உள்ள விவசாய நிலங்களும் உவர்ப்புத்தன்மை அடைந்து விவசாயத்திற்கு பயன்பாடற்று போய்விடும் அபாயமும், மீனவர்களின் வாழ்வாதாரமும், மீன்பிடி தொழிலும் பாதிக்கப்படும் என்பதால் பல இடங்களில் உப்பளங்கள் அமைக்க எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.