7/22/2018

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுக்க அரசுக்கு வலியுறுத்தல்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட ஆதரவு மனநிலையை உருவாக்க தொடங்கியுள்ளது. மே.22க்கு பிறகு ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட போது பெரிய அளவில் அதன் தாக்கம் மக்களுக்கு புரியாத நிலையில் இருந்து வந்தது. படிப்படியாக தற்போது அந்த  ஆலை மூடலால் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி, சிறுகுறு தொழில் பாதிப்பு, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலையிழப்பு, குடும்ப வருமானம் பாதிப்பு என பல நிலைகளிலும் அதன் தாக்கம் இருப்பதை மக்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பல்வேறு வதந்திகளை கிளப்பி பொது மக்களை பலிகடா ஆக்கியதை அவர்களே கண்டுணர்ந்து வருகின்றனர். போராளிகள் என்ற போர்வையில் பொதுமக்களை போராட்டத்திற்குள் கொண்டுவர அவர்களை மூளைச்சலவை செய்து வெளிநாட்டு பணத்திற்காக கைக்கூலிகளாக செயல்பட்டவர்கள் போராட்டத்தை திசை திருப்பி கூலிப்படைகளைக் கொண்டு கலவரமாக உருவாக்கியதையும், இதன் வாயிலாக அவர்கள் கோடிகளில் புரள்வதையும் கண்கூடாக கண்டு வருகின்றனர்.
தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்து தூத்துக்குடி கலெக்டரிடமும், இம்மாவட்ட அமைச்சரிடமும் மனுக்களை அளித்து வருகிறார்கள். கடற்கரை பகுதிகளான திரேஸ்புரம், மாதா கோவில் பகுதி, குரூஸ்புரம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவ மக்கள் தங்களை மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூளைச்சலவை செய்து போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்ததாக பகிரங்கமான தகவலை வெளிப்படுத்தினர். அதன்பின்னரே மாவட்டம் முழுவதும் இந்த செய்தியானது இந்த கலவரத்தின் பின்னணியை அம்பலமாக்கியது.
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அடுத்துள்ள மடத்தூர் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கலெக்டரிடம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க கோரி மனுக்கள் அளித்தனர். அதில் இடம்பெற்றிருந்த பெண்கள் ஸ்டெர்லைட் ஆலை தங்கள் பகுதிக்கு அளித்து வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நடமாடும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், வேலையிழப்பால் பல குடும்பங்கள் தத்தளிப்பதையும் சுட்டிக்காட்டினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் பரவுகிறது என்ற வதந்தியை கிளப்பித்தான் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பகுதியில் அதுபோன்றதான எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்கள் நோய் நொடியின்றி நலமாகத்தான் இருக்கிறார்கள் என மடத்தூரைச் சேர்ந்த லெட்சுமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குமரெட்டியாபுரம், தெற்குவீரபாண்டியபுரம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், ஸ்பிக்நகர், தாளமுத்து நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1000த்துக்கும் மேற்பட்டோர் மற்றும் லாரி போக்குவரத்து ஊழியர்கள் திரண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலை மூடலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டி மனுக்கள் அளித்தனர்.
மனு  கொடுக்க வந்த பெண்கள் குறிப்பிடுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலையிழப்பு பாதிப்பால் குடும்ப வருமானம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பறிபோய் ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதியாகி உள்ளனர். எங்கள் வீட்டு பிள்ளைகள் கடன்வாங்கி பட்டப்படிப்புகளையும், இன்ஜினீயரிங் படிப்புகளை முடித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் இதுபோன்ற வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகளை மூடுவதால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் தங்கராஜ், செல்வம் ஆகியோர்  கூறுகையில், மன்னர்கள் காலத்தில் இருந்தே தூத்துக்குடியில் பிரதான தொழிலாக உப்பளமும், மீன்பிடி தொழிலும் உள்ளது. ஆனால் டிசிடபிள்யூ, டேக், ஸ்பிக், ஸ்டெர்லைட், டிடிபிஎஸ், ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகள் ஆரம்பித்ததோ அன்று முதல் பல தொழில்களின் முன்னோடியாக தூத்துக்குடி துறைமுகம் விளங்கத் தொடங்கியது. இதன் காரணமாகவே தூத்துக்குடி மாநகரமும் அசுர வளர்ச்சி அடைந்தது. மக்களின் பொருளாதார நிலையும் முன்னேற்றம் அடைந்தது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் தினசரி தாமிர தாது, ராக் பாஸ்பேட், நிலக்கரி, தாதுமணல், அமிலங்கள், இதர மூலப்பொருட்களை கையாளுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன் மூலம் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கிளீனர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய லேத் பட்டறையாளர்கள், மெக்கானிக்குகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள், தினக் கூலிகள் என கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொழிற்சாலை மூடலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தேவையில்லாத பொய் பிரசாரத்தாலும், வதந்தியாலும் கலவரத்தை உருவாக்கி ஆலைக்கு சீல் வைக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தனியார் வங்கிக்கடன் தவணையை செலுத்த முடியாத நிலை, மாத வருமானம் பாதிப்பு, வீட்டு வாடகை செலுத்த முடியாதது, பிள்ளைகளின் கல்விச்செலவு, மருத்துவச் செலவு, கடன்சுமைக்காக சொத்துக்களை விற்கும் நிலைமை போன்றவற்றை கலெக்டரிடம் குறிப்பிட்டு உருக்கத்துடன் பலர் மனுக்களை அளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி நகர பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கேட்ட போது, தூத்துக்குடி மாநகருக்கு சம்பந்தம் இல்லாத பல நபர்கள், அந்நிய சக்திகள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்து பொதுமக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு கலவரத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். வானம் பார்த்த பூமியான தூத்துக்குடி மண்ணில் மேலும் பல தொழில்கள் வருவதை கெடுக்கும் நோக்கத்தில் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். பெரிய ஆலைகள் மூடப்பட்டு வருவதால், 15 வருடங்களுக்கு முன்பு எந்த நிலையில் தூத்துக்குடியின் பொருளாதார வளர்ச்சி பின்தங்கி இருந்ததோ அந்த நிலையை மீண்டும் உருவாக்கி வருகிறார்கள். பல்லாண்டுகளாக ஆலையில் பணிபுரிந்து வருபர்களே நல்ல உடல் நலத்தோடு ஆரோக்கியமாக பணிபுரிந்து வரும் சூழ்நிலையில் கேன்சர் உள்ளிட்ட தேவையற்ற வதந்திகளை கிளப்பி பல்லாயிரக்கணக்கான நபர்களின் வேலைவாய்ப்பை பறித்துள்ளனர் என தெரிவித்தனர்.
மொத்தத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு வேலைவாய்ப்பை இழந்தவர்கள், தொழில் பாதிப்படைந்தவர்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்தையும் மீட்டுக் கொடுக்க மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அரசு ஆவண செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் உள்ளூர் தொழில் அதிபர்: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்



தூத்துக்குடி நகர வர்த்தகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அந்த பிள்ளையாரின் பெயரை கொண்ட தொழில் அதிபர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியமானவர்களில் ஒருவராகவும் இருந்தவர். இந்த போராட்டத்தை வீரியம் பெறச் செய்ய பல விதங்களிலும் நிதியுதவி அளித்துள்ளார். வர்த்தகராக இருக்கும் ஒருவர் பல தொழிற்சாலைகளின் பூர்வாங்க பணிகள் மற்றும் அதன் சாதக பாதகங்கள் தெரிந்த ஒருவர் எதற்காக தனிப்பட்ட முறையில் ஸ்டெர்லைட் என்ற தொழிற்சாலையை எதிர்த்து போராட வேண்டும்?
தூத்துக்குடி கடைவீதியில் மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் பல இடங்களிலும் தனது ஆடம்பர பொருட்கள் விற்பனை மையத்தை தொடங்கி வியாபாரத்திலும், லாபத்திலும் கொடிகட்டி பறக்கும் இவர் தானும் ஒரு தொழில் அதிபர் என்பதை மறந்து இன்னொரு தொழிற்சாலையை முடக்கத்துடிப்பது ஏன்? இந்தியாவின் தாமிர தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து உலகச்சந்தையில் நாட்டின் அந்நிய செலாவணியையும் மதிப்பையும் உயர்த்தும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து திடீரென போராட்டத்தில் குதித்தது ஏன்? என அவரைச் சார்ந்த வர்த்தகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தூத்துக்குடி கலவரத்திற்கு பின்னர் மக்கள் மத்தியிலும் பெரிய வினாவை எழுப்பியுள்ளது.
அந்த தொழில்அதிபர் அங்கம் வகிக்கும் இன்னபிற அமைப்புகளிலும் அரசல் புரசலாக இந்த சர்ச்சை விசுவரூபம் எடுத்து வருகிறது. இதற்கு பின்னணியில் ஏதோவொரு நெருடல் இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள். தொழில் அதிபரின் பின்னணியைப் பற்றி விசாரித்ததில் சில தகவல்கள் சாதக பாதகமாக வெளியே வந்தன.
தூத்துக்குடியில் மிகவும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம் இவர்களுடையது. இவரது தந்தையின் பெயரைத் தெரியாதவர்கள் ஊருக்குள் இருக்க முடியாது. அத்தனை பிரபலம். கடும் உழைப்பு மூலம் பல தொழில்கள் வாயிலாக முன்னேற்றத்தை அடைந்தவர். பல அடைமொழிகளோடு பொதுமக்களும் இவரை இன்றளவும் மக்கள் போற்றத்தான் செய்கிறார்கள். இவரது மூத்த மகன்தான் அந்த குறிப்பிட்ட தொழில் அதிபர். ஆரம்பத்தில் தந்தைக்கு தொழிலில் உதவியாக இருந்தவர் தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் அந்த தொழில் நிறுவனங்களுக்கு தலைவரானார்.
தந்தையைப் போல் அல்லாமல் வியாபாரத்தில் சில சில திரைமறைவு தில்லு முல்லு வேலைகளை செய்து குறுகிய காலத்தில் பெரிய முன்னேற்றத்தை அடைந்ததாக ஊர்மக்கள் அரசல் புரசலாக பொதுமக்கள் செவிவழிச் செய்தியாக பேசுவது உண்டு. இவர் சார்ந்திருக்கும் அமைப்புகளிலும் இந்த சர்ச்சை நிலவத்தான் செய்கிறது. ஒரு விதத்தில் தன்னை சட்டரீதியாக பாதுகாத்துக் கொள்வதற்காக பற்பல பொது அமைப்புகள், சமூக போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அந்த  பதவிகள் மூலம் அரசு வட்டத்திலும், தொழில் வட்டத்திலும் தனது தேவைகளை அரங்கேற்றிக் கொள்வதில் அரசியல்வாதிகளை மிஞ்சிவிடுவார்.
அதே தோரணையோடுதான் இவர் ஸ்டெர்லைட் ஆலையில் தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டுவதற்காக ஏராளமான நபர்களை நிரந்தர பணிக்கு அந்நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனால் அவரது எண்ணப்படி அந்நிறுவனம் ஆட்களை ஏற்றுக் கொள்ள வில்லை. சரியான கல்வித் தகுதி, தொழிற் தகுதியில்லாமல் ஆட்களை நியமிக்க வாய்ப்பில்லை என ஸ்டெர்லைட் நிர்வாகம் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியது. இதுவே ஸ்டெர்லைட் மீதான அதிருப்தியை இவருக்கு முதன் முதலில் ஏற்படுத்தியது. சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிராக பல வகைகளிலும் செயல்படத் தொடங்கினார். அதேபோல் தான் பதவி வகிக்கும் அமைப்பு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு நிதி அளிக்க கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அணுகி பெரும் தொகையை கேட்டபோது இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முடியாது என கூறியதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் அந்த தொழில் அதிபர்.
தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த தொழில் அதிபருக்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தொடர் போராட்டம் கைகொடுத்தது. போலி போராளிகளாக களமிறங்கிய நித்யானந்த் ஜெயராம், பியூஷ் மானூஷ் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. பன்னாட்டு நிதியும் தாராளமாக கைகளில் புழங்க தொடங்கியது. மே.22 கலவரத்திற்கு முன்னதாக ஏற்கனவே மார்ச் 24ல் ஸ்டெர்லைட் ஆலை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் அறிவித்ததும், அதற்கு முந்தைய தினத்தில் தனக்குத்தானே விளம்பரம் தேடிக்கொள்வதற்காக தனது வீட்டில் மர்ம நபர்கள் கல்வீச்சு நடத்தியதாக நாடகமாடிக் கொண்டார். போலீசாருக்கு இது நாடகமென அப்பட்டமாக தெரிந்தாலும், ஊரில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பதால் பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை.
தூத்துக்குடி கலவரத்திற்கு பிறகு இதன் பின்னணியில் கூட்டாக சதி செய்து செயல்பட்டவர்கள் பட்டியலில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற விசாரணையை தீவிரப்படுத்திய போதுதான் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதில் பிள்ளையாரின் பெயர் கொண்ட தொழி அதிபரின் பெயரும் முதன்மை பெற்றிருந்தது. அதே சமயத்தில் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை பெற்றிருப்பதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் காதுகளுக்கு எட்டியது. அதனடிப்படையில் போலீசார் பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வருமானவரித்துறை, விற்பனை வரித்துறை என விசாரணை வளையம் விரிந்து கொண்டே செல்கிறது.
இதேபோல் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்த சமயத்தில் பொருளாதார வளர்ச்சியில் கொழித்த நபர்களையும் அடையாளம் காணத் துவங்கியுள்ளனர். விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் தூத்துக்குடி நகர மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பரபரப்பையும், தங்களை எப்படியெல்லாம் போராட்டத்தை வழிநடத்தியவர்கள் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற அதிருப்தியையும், முகச்சுளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
------------------------------------

7/14/2018

தூத்துக்குடி கலவரத்தை தூண்டிய குள்ளநரிகளின் வேஷம் கலையுமா?


2018 மே 22ம் தேதி அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது. தமிழக வரலாற்றில் அது கருப்பு நாள். ஸ்டெர்லைட் ஆலையை நிரத்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு (?) போராட்ட குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு முந்தைய நாளே 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது. போராட்ட நாளான்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பனிமயமாதா பேராலயத்தில் தொடங்கிய பேரணியை விவிடி சிக்னல் அருகே காவல்துறையால் தடுக்கப்பட்டது. தடையை மீறி பேரணி முன்னேற, ஒரு கட்டத்தில் திடீரென கல்வீச்சு தாக்குதல் நடந்தது.
இதனால் காவல்துறையினர் பின் வாங்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த கும்பல் அங்கிருந்த இருசக்கர வாகனங்களை தீ வைத்தது. மேலும், காவல்துறையின் வாகனங்களுக்கு சேதப்படுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்களுக்கும் ஒரு கும்பல் தீ வைத்தது.
கலவரத்தில் நடந்த தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் தீவிரவாதிகள் ஊடுருவல் தான். தமிழகத்தில் நான் ஏற்கனவே கூறியபடி தீவிரவாதிகள் புகுந்துள்ளனர் என தனது கருத்தை ஆழமாக பதிவு செய்தார்.
இதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மக்களின் உணர்வு போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டார் என கூக்குரலிட்டனர். ஆனால், இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், சிபிசிஐடி போலீசாரின் கைகளில் கைத்துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், சிவப்பு பாஸ்பரஸ் இருந்தற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுவருவல் என மத்திய இணை அமைச்சர் கூறியது உண்மை என்று புலப்படுகிறது.
மீனவ மக்கள் அப்பாவிகள். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். அப்படி நம்பி விட்டால் எது நடந்தாலும், பின் வாங்க மாட்டார்கள். இதை தான் ஒரு கும்பல் பயன்படுத்தி உள்ளது.
கைத்துப்பாக்கி, சிவப்பு பாஸ்பரஸ், நாட்டு வெடிகுண்டுகள் என அளவுக்கு மீறி செலவு செய்துள்ளது. இங்கு அளவுக்கு மீறி என்பது, இதனை செயல்படுத்த அவர்கள் வகுத்த திட்டம், அதை அவர்கள் பாதை மாறாமல் மக்களிடம் கொண்டு சென்று மூளை சலவை செய்தது என அனைத்து கச்சிதமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுக்கு எந்தவித காயமும் இல்லை. தற்போது அவர்கள் வாங்கி காசுக்கு கூவிவிட்டு தலைமறைவான வாழ்க்கைக்கு சென்றுவிட்டனர். அல்லது அடுத்த  போராட்டத்துக்கு தூண்டி விடுபவர்களிடம் கூலி வாங்கி கொண்டு திட்டம் தீட்ட சென்று விட்டார்களோ தெரியவில்லை.
அவர்களது திட்டம் இந்திய பொருளாதாரத்தை சீரழிப்பது தான். சொந்த நாட்டில் இருந்து கொண்டு, அந்நிய நாட்டு ஏஜென்டிடம் கைக்கூலி பெற்று, அப்பாவி மக்களை பகடையாக்கி திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில், அவர்கள் சொகுசு பங்களாவுக்குள் அடைக்கலமாகி விட்டனர்.
தற்போது தான் அதன் தாக்கம் மீனவ மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. எங்களிடம் எது ஆயுதம் என்ற புலம்பலும் கேட்க தொடங்கி உள்ளது. சிபிசிஐடி போலீசார் விசாரணை முடிவுக்கு வரும்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான குள்ளநரிகளின் வேஷமும் கலைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் பழரசம் விநாயகமூர்த்தி: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவராக இருப்பவர், பா.விநாயகமூர்த்தி. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தவர். இந்த போராட்டத்தை வீரியம் பெறச் செய்ய பல விதங்களிலும் நிதியுதவி அளித்துள்ளார். வர்த்தகராக இருக்கும் ஒருவர் பல தொழிற்சாலைகளின் பூர்வாங்க பணிகள் மற்றும் அதன் சாதக பாதகங்கள் தெரிந்த ஒருவர் எதற்காக தனிப்பட்ட முறையில் ஸ்டெர்லைட் என்ற தொழிற்சாலையை எதிர்த்து போராட வேண்டும்?
தங்கத்தின் பயன்பாட்டில் தாமிரமும், கந்தக அமிலமும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கையில், தங்க வியாபாரத்தில் தூத்துக்குடி நகரம் மட்டுமல்லாது, கோவில்பட்டி, ராஜபாளையம் என அடுத்தடுத்து கிளைகளை தொடங்கி கொடிகட்டி பறக்கும் இவர் தாமிரமும், கந்தக அமிலமும் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து திடீரென போராட்டத்தில் குதித்தது ஏன்? என அவரைச் சார்ந்த வர்த்தகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தூத்துக்குடி கலவரத்திற்கு பின்னர் மக்கள் மத்தியிலும் பெரிய வினாவை எழுப்பியுள்ளது.
அவர் சார்ந்திருக்கும் வர்த்தகர்கள் சங்கத்திலும் அரசல் புரசலாக இந்த சர்ச்சை விசுவரூபம் எடுத்து வருகிறது. இதற்கு பின்னணியில் ஏதோவொரு நெருடல் இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள். விநாயகமூர்த்தியின் பின்னணியைப் பற்றி விசாரித்ததில் சில தகவல்கள் சாதக பாதகமாக வெளியே வந்தன.
 தூத்துக்குடியில் மிகவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த செல்லையா நாடார்-பூமரத்தம்மாள்  தம்பதியினரின் மகன் பால்ராஜ் நாடார். இவருக்கு மூத்த மகனாக பிறந்தவர்தான் பா.விநாயகமூர்த்தி. இவருக்கு பிறகு பா.முருகானந்தம், பா.செல்வராஜ் ஆகிய இரு மகன்கள் பிறந்தனர். ஆரம்பத்தில் தூத்துக்குடி நகர நூற்றாண்டு கட்டிடத்தில் பழக்கடை, பழச்சாறு கடை என  படிப்படியாக உழைப்பின் உத்வேகத்தால் வளர்ந்தவர் பால்ராஜ் நாடார். இதனாலேயே இவருக்கு பழரசம் பால்ராஜ் நாடார் என்ற பெயர் பிரபல அடைமொழியானது.
பழரசக்கடை மட்டுமின்றி அடுத்தகட்டமாக காசுக்கடை பஜாரில் 1982ல் நகை அடகுக்கடையிலும் முதலீட்டை முடக்கி நகைத்தொழிலில் கால்பதித்தார் பால்ராஜ் நாடார். இவருக்கு உதவியாக விநாயகமூர்த்தி உள்ளிட்ட சகோதரர்கள் 3 பேரும் இருந்தனர். இதன்மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்திக் கொண்ட இவர்கள் 1991ல் தூத்துக்குடியில் அன்னை ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் புதிதாக நகைக்கடையை ஆரம்பித்து நடத்தினர். பழரசம் பால்ராஜ் நாடார் மீது கொண்ட பற்று காரணமாக படிப்படியாக மக்கள் மத்தியில் மதிப்பை பெற துவங்கியது இந்நிறுவனம்.
2004ல் பழரசம் பால்ராஜ் நாடார் இறந்த பிறகு, பா.விநாயகமூர்த்தி தலைமையேற்று இந்நிறுவனத்தை நடத்தினார். இவர் மீது வெளிநாடுகளில் இருந்து வெள்ளி கடத்தல் உள்ளிட்ட சிற்சில புகார்கள் அவ்வப்போது வெளிவந்தன. குறுகிய காலத்தில் பெரிய அளவிலான இவரது வளர்ச்சி வர்த்தகர்கள், பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. திரைமறைவு முறைகேடு வழிகளில் இவர் பொருளாதார முன்னேற்றம் அடைவதாக நகருக்குள் பரவலாக பேசப்பட்டது. அதன்பிறகு தனது பாதுகாப்புக்காக பல இயக்கங்களிலும், வர்த்தக அமைப்புகளிலும் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டார்.
ஸ்டெர்லைட் ஆலையில் தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டுவதற்காக ஏராளமான நபர்களை நிரந்தர பணிக்கு அந்நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனால் அவரது எண்ணப்படி அந்நிறுவனம் ஆட்களை ஏற்றுக் கொள்ள வில்லை. இதுவே ஸ்டெர்லைட் மீதான அதிருப்தியை இவருக்கு முதன் முதலில் ஏற்படுத்தியது. சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிராக பல வகைகளிலும் செயல்படத் தொடங்கினார். அதேபோல் வர்த்தக சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி அளிக்க கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அணுகி பெரும் தொகையை கேட்டபோது இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முடியாது என கூறியதால் ஆத்திரத்தின் உச்சிக்கே விநாயகமூர்த்தி சென்றுவிட்டார்.
தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த விநாயகமூர்த்திக்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தொடர் போராட்டம் கைகொடுத்தது. போலி போராளிகளாக களமிறங்கிய நித்யானந்த் ஜெயராம், பியூஷ் மானூஷ் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. பன்னாட்டு நிதியும் தாராளமாக கைகளில் புழங்க தொடங்கியது. மார்ச் 24 முற்றுகை போராட்டம் அறிவித்ததும், அதற்கு முந்தைய தினத்தில் தனக்குத்தானே விளம்பரம் தேடிக்கொள்வதற்காக தனது வீட்டில் மர்ம நபர்கள் கல்வீச்சு நடத்தியதாக நாடகமாடிக் கொண்டார். போலீசாருக்கு இது நாடகமென அப்பட்டமாக தெரிந்தாலும், ஊரில் முக்கிய பிரமுகர், வர்த்தக சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பதால் பெரிதாக காட்டிக் கொள்ள வில்லை.
தூத்துக்குடி கலவரத்திற்கு பிறகு இதன்பின்னணியில் கூட்டாக சதி செய்து செயல்பட்டவர்கள் பட்டியலில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற விசாரணையை தீவிரப்படுத்திய போதுதான் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதில் பா.விநாயகமூர்த்தியின் பெயரும் முதன்மை பெற்றிருந்தது. அதே சமயத்தில் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை பெற்றிருப்பதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் காதுகளுக்கு எட்டியது. அதனடிப்படையில் போலீசார் பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வருமானவரித்துறை, விற்பனை வரித்துறை என விசாரணை வளையம் விரிந்து கொண்டே செல்கிறது. இதேபோல் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்த சமயத்தில் பொருளாதார வளர்ச்சியில் கொழித்த நபர்களையும் அடையாளம் காணத் துவங்கியுள்ளனர். விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் தூத்துக்குடி நகர மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பரபரப்பையும், தங்களை எப்படியெல்லாம் போராட்டத்தை வழிநடத்தியவர்கள் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற அதிருப்தியையும், முகச்சுளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
------------------------------------

7/08/2018

மாயமான போலி போராளிகள்- கொந்தளிப்பில் தூத்துக்குடி மக்கள்: தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக வரிந்து கட்டும் அமைப்புகள்


பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளுக்குப் பிறகு தூத்துக்குடி நகரமானது இயல்பு நிலையை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தாலும், போலி போராளிகளின் சில விரும்பத்தகாத செயல்களால் முழுவதுமாக தனது பழைய நிலைக்கு மாற்றிக்கொள்ள தத்தளித்துக்  கொண்டிருக்கிறது. தூத்துக்குடி கலவரத்திற்கு பிறகே போலி போராளிகள் வெளிநாட்டு பணமோகத்தில் தங்களை எவ்வாறெல்லாம்  துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற நிலவரம் மக்களுக்கு தெளிவாக தொடங்கியது.

ஒருபுறத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், மறுபுறத்தில் வேலையிழந்த தொழிலாளர்கள், மறுமுகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள், அதன் உபதொழில்கள், சிறு குறு தொழில்கள், முடங்கிப்போன சரக்கு போக்குவரத்து தொழில்கள், சுணங்கிப்போன துறைமுகம் என நாலா பக்கமும் ஏதோவித இறுக்கமான சூழல் பொது மக்களை பற்கடிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் அதிகாரம் என்ற அமைப்பை சேர்ந்த வக்கீல்கள் அரிராகவன், வாஞ்சிநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தங்களது அமைப்புக்கும் கலவரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பொதுமக்களே கலவரத்திற்கு காரணம் என்ற அபாண்டக் குற்றச்சாட்டை முன்வைத்த போதுதான் தாங்கள் போலி போராளிகளால் ஏமாற்றப்பட்டது பட்டவர்த்தனமானது. அதன்பிறகே உண்மைத்தன்மை தெளிவாகி படை படையாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடமும், ஒரு நபர் விசாரணை கமிஷன் முன்பும் ஆஜராகி பொதுமக்கள் புகார் வாயிலாக விளக்கம் அளிக்கத் தொடங்கி உள்ளனர்.

தூத்துக்குடியில் மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் மாதா கோவில் பகுதி, பாத்திமா நகர், புதுத்தெரு, குரூஸ்புரம், திரேஸ்புரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த ஜூன்.29ம் தேதி முதன்முதலாக இந்த கலவரத்தின் பின்னணியை எழுத்துப்பூர்வ புகாராக அளித்த பின்னரே, மடத்தூர், புதியம்புத்தூர் என படைபடையாக பொதுமக்கள் கிளம்பிச் சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடமும் போலி போராளிகள் கிராமம் கிராமமாக புகுந்து போலி பிரசாரம், வதந்தியை பரப்பி பொதுமக்களை எவ்வாறெல்லாம் மோசம் செய்தார்கள் என்ற விவரங்களை அளிக்கத்தொடங்கியுள்ளனர்.
அதன்பின்னரே உண்மை நிலவரத்தை ஊரறியத் தொடங்கியது. கலவர தினத்தில் பொதுமக்களை முன்னிறுத்திவிட்டு போராளிகள் போர்வையில் முகம் காட்டியவர்கள் எந்தவித சுவடுமின்றி மாயமானதும் வெட்ட வெளிச்சமானது. பணத்தைக் கொட்டிக் கொடுத்து பொதுமக்கள் கூட்டத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளை புகுத்தி நாசவேலைகளில் ஈடுபட்டதும் அப்பட்டமானது. 

தொழிற்சாலைகள் மூடலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களும் தங்களது ஆதங்கத்தை தற்போது வெளிக்கொட்டத் தொடங்கியுள்ளனர். வேலையிழந்த பட்டதாரிகளும் தங்கள் தரப்பு விவாதத்தை முன்வைக்கிறார்கள். தொழிற்சாலைகள் பெருக வேண்டும், வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும் என்ற கொள்கைகளுக்கு முரணாக சில புல்லுருவி அரசியல்வாதிகள் கொட்டமடிப்பதை சகிக்க விரும்பாமல் தொழிற்சாலைகளுக்கு ஆதரவான இயக்கங்களும் புற்றீசலாய் பெருகத் தொடங்கியுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலை மூடலால் தூத்துக்குடி மக்கள் மட்டுமல்லாது இந்திய அளவில் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்புகள் குறித்த விவரங்கள் ஒருவித பொருளாதார அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்தக அமிலத்தின் விலை ஒரு டன் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்ந்து விட்டதன் விளைவு காரணமாக 29 கெமிக்கல் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாய நிலை உள்ளது என்ற விவரத்தை கெமிக்கல் தொழிற்சாலைகள் சங்க பிரதிநிதிகள் இளநகை, குருமூர்த்தி ஆகியோர் சமீபத்தில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடலால் அதனை நேரடியாக நம்பியிருந்த 29 கம்பெனிகளும், மறைமுகமாக நம்பியிருந்த 150 கம்பெனிகளும் பாதிக்கப்பட்டு, அதில் பணிபுரியும் 10 ஆயிரத்து 596 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதுடன், ஒட்டுமொத்தமாக ரூ.24 ஆயிரத்து 345 கோடி மதிப்பிலான உற்பத்தி முடங்கியுள்ளது என  தெரிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை மூடலால் 3534 பேர் நேரடியாகவும், 15 ஆயிரத்து 460 பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இவர்களுக்கு ஆண்டு வருவாய் ஆயிரத்து 256 கோடி இழப்பு ஏற்படும். மக்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள். விவசாயம் பாதிப்பு, புற்றுநோய் பரவுகிறது, நிலத்தடி நீர் பாதிப்பு என்றெல்லாம் சொல்வது மிகவும் தவறான தகவல். உண்மைக்கு புறம்பானது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. சில விஷமிகள் வதந்திகளை கிளப்பிவிட்டு தொழிற்சாலையை முடக்கியுள்ளனர். பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மேலும் பல பாதுகாப்பு அடுக்குகளுடன் செயல்பட அரசும், மக்களும் வலியுறுத்த வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தூத்துக்குடி காண்டிராக்டர்கள் சங்க தலைவர் எஸ்.தியாகராஜன் அதே கூட்டத்தில் வலியுறுத்தினார். 
ஆண்டுக்கு 66 ஆயிரம் டன் அளவில் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உர உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கோவை பயனீர் உரத்தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் பேசியவர்கள் கந்தக அமில விலை உயர்வால் உர உற்பத்தி பாதிப்பால் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களை எச்சரிக்கை தகவலாக தெரிவித்துள்ளனர். இதுபோக ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்யும் மூலப்பொருட்களை நம்பியுள்ள ஏனைய 150 தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாய கட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் தங்களது தரப்பிற்கு இயந்திரங்களை முறையாக கையாளாவிட்டால் அவை பழுதடைந்து உற்பத்தித்திறனை இழந்து விடும். எனவே ஆலையை மீண்டும் இயக்க உரிய அனுமதி அளிக்க அரசிடமும், பசுமை தீர்ப்பாயத்திடமும் மனு அளித்துள்ளது. பிரச்னையின் முகாந்திரமாக சொல்லப்பட்ட பகுதியான குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மக்களே தற்போது கலவரத்தில் தங்களது பங்களிப்பு இல்லை எனவும், விஷமிகளின் பொய் பிரசாரத்தை நம்பி போராட்டக்களத்தில் இறங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியாபுரம், டி.குமாரகிரி என்ற காயலூரணி, சாமிநத்தம், வேலாயுதபுரம், புதூர் பாண்டியாபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று தூத்துக்குடி மாவட்ட அமைச்சரான கடம்பூர் ராஜூவை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்துள்ளனர். தெற்கு வீரபாண்டியாபுரத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் என்பவர் தங்களது பகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலை வந்தபிறகே ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் வளம்பெற்றதாகவும், யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டதாகவும், ஒரே மாதத்தில் ஆலை மூடலின் பாதிப்புகளை உணரத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களை திரட்டிச் சென்று விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

ஒன்று மட்டும் உறுதி..! தொழில் வளர்ச்சி என்பது மறுக்க முடியாதது. அதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்வதற்காக போராட வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக தொழில் வளர்ச்சியை முடக்குவது என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, தங்களது வாழ்வாதாரத்திற்கும் வைத்துக் கொள்ளும் வேட்டு போன்றது. போலியான வதந்திகளுக்கு செவி மடுக்காமல் உண்மைத்தன்மையை அறிந்து விழிப்புணர்வு பெற வேண்டும்.
ஆண்டிராய்டு என்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் வசதியைக் கண்டு பிரமிப்போடு பயன்படுத்தும் அதே வேளையில், அதன் மூலமாக 10 சதவீதம் பேர் கண்புற்று நோயால் பாதிக்கப்படுவதை   பொருட்படுத்துவதில்லை. புற்றுநோய் தாக்கத்தில் புகையிலையால் மட்டும் 40 சதவீதம் பேர் பாதிக்கப்படுவதை அறிந்தாலும் புகைப்பவர்கள் அதனை கருத்தில் கொள்வது இல்லை. பிளாஸ்டிக் பயன்பாடு என்பது மண்ணிற்கும், மனிதர்களுக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தீங்குவிளைவிக்கும் என தெரிந்தும் அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. தங்களுக்கு தேவை என வரும்பட்சத்தில் அது எத்தகையை பாதிப்புகளாக இருந்தாலும் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். வளர்ச்சி என்ற ஒன்று வரும் போது பாதிப்பு என்பது சிறிதளவாவது இருக்கும் என்பதை வெளிப்படையாக உணர மறுப்பதே உண்மை.

இயற்கையை நிரந்தர ஊனப்படுத்துவதை ஊக்குவிக்கக் கூடாது. பசுமையை பாதுகாக்க வேண்டும். நோய்க்காரணிகளை அகற்றியெறிய வேண்டும். மக்களுக்கு நன்மைகள் சென்றடைய வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். அண்டை நாடுகளிடம் மண்டியிடுவது அகல வேண்டும். தொழிற்போட்டியில் மற்ற நாடுகளுடன் மல்லுக்கு நிற்க வேண்டும். இதுதான் எந்தவொரு தொழில் தங்களது பகுதியில் தொடங்கப்பட்டாலும் மக்கள் முன்வைக்க வேண்டிய கருத்துருவாக இருக்க வேண்டும். விதிமீறல்களில் தொழிற்சாலைகள் ஈடுபடாமல் கண்காணிக்கவும் வேண்டும்.  
இப்படிச் செய்தாலொழிய இந்தியா வல்லரசு நாடாகும்  என்ற கனவு ஈடேறப் போவதில்லை. எத்தனை அப்துல்கலாம்கள் பிறந்தாலும் மக்கள் விழிப்புணர்வு அடையாவிட்டால் போலி போராளிகள் மக்களை வஞ்சித்துக் கொண்டேதான் இருப்பார்கள் என்பது திண்ணம்.
=====================






7/03/2018

“மூளைச்சலவை செய்து போராட்டத்திற்கு தூண்டிவிட்டார்கள்” தூத்துக்குடி மீனவ கிராமத்தினர் குமுறல்



தூத்துக்குடி கலவர விவகாரத்தில் படிப்படியாக பல உண்மைகள் வெளிப்பட்டு வரும் நிலையில், தற்போது மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களை மக்கள் அதிகாரத்தை சேர்ந்த சிலர்  மூளைச்சலவை செய்து போராட்டத்திற்கு தூண்டிவிட்டதாக சரமாரியாக புகார் அளித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பல போராளிகளின் முகம் தோலுரிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை கிளர்ச்சி அடையச்செய்து கடந்த மே.22ல் போலி போராளிகளும், சமூக விரோதிகளும் மிகப்பெரிய கலவரத்தை அரங்கேற்றினர். கடந்த ஜனவரிக்கு முன்பு வரை ஏதேதோ சப்பைக்கட்டு காரணங்களைக் கூறி இந்த ஆலையை சீல் வைக்க சுயலாப கட்சிகளும், ஆதாய எதிர்நோக்கர்களும் திசைக்கு ஒன்றாக போராட்டங்களையும், கோஷங்களையும் எழுப்பி வந்த நிலையில் ஜனவரிக்கு பின்னதாக போராட்ட வடிவத்தை முற்றிலுமாக வேறு வடிவத்திற்கு மாற்றினர்.
ஸ்டெர்லைட் ஆலையால் அதிகப்படியாக கேன்சர் நோய் பரவுவதாகவும், இன்னும் பல இன்னல்கள் ஏற்படுவதாகவும் பிரசார யுக்தியை மாற்றினர். இதன் பின்னணியில் பன்னாட்டு சதி இருப்பதை மக்கள் உணரவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஏற்கனவே வேதாந்தா குழுமத்தை ஒழிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் கையூட்டை பெற்றுக் கொண்டு அந்த நிறுவனத்திற்கு எதிராக போராடி வரும் ஃபாயில் வேதாந்தா என்ற அந்த அமைப்பு தொழிற்போட்டி நாடான சீனாவின் கோடிக்கணக்கான நிதியுதவியோடு இந்தியாவிலும் தனது கைங்கர்யத்தை போலி போராட்ட சக்திகளூடாக அரங்கேற்றியது.
போராளிகள் என்று தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியும் நித்யானந்த் ஜெயராம், பியூஷ் மானூஷ் உள்ளிட்டவர்கள் மக்களோடு மக்களாக கலந்து மக்கள் அதிகாரம் என்ற அமைப்பைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு நிதியை வாரி வழங்கி இதற்கான சதித்திட்டங்களை செயல்படுத்த தொடங்கினர். இதற்காக வன்முறையில் சிறிதும் நாட்டமில்லாத தூத்துக்குடி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்த பேராசிரியர் பாத்திமா பாபு மற்றும் சில உள்ளூர் பிரமுகர்களையும், தொழில் அதிபர்களையும், வணிகர்கள் சங்க பிரதிநிதிகளையும் கையில் எடுத்தனர்.
ஒரு வழியாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை என்று மட்டுமே பரப்புரை செய்துவிட்டு கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று, அவர்களுக்கு மத்தியில் ஏற்கனவே சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு கருப்பு ஆடுகளாய் போராட்டக்கூட்டத்திற்குள் நுழைய வைக்கப்பட்ட மாவோயிஸ்ட் நாச வேலைக்காரர்களை வைத்து கலவர வெறியாட்டத்தை திட்டமிட்டபடியே நடத்தி முடித்து விட்டனர்.
கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக கலவரத்திற்கு பின்னர் போலி போராளிகளின் வெறியாட்டம் மெல்ல மெல்ல வெளிவரத்தொடங்கியுள்ளது. தங்களை உணர்ச்சிவசப்படுத்தி மூளைச்சலவை செய்து இந்த போராட்டத்தில் உட்புகுத்தியதை உணரத்தொடங்கியதின் விளைவு தற்போது மக்களை வேதனையின் விளிம்பில் நிறுத்தியுள்ளது. தற்போது மக்கள் அப்பட்டமாகவே தாங்கள் எப்படியெல்லாம் இந்த போராட்டத்திற்காக ஏமாற்றப்பட்டோம் என்பதை புகார்கள் வாயிலாக ஒருநபர் கமிஷன் முன்பு தெளிவுபடுத்த கூட்டம் கூட்டமாக கிளம்பி விட்டனர்.
கடந்த 29ம் தேதி இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வ புகாராகவும், சாட்சியாகவும் அளித்தனர். இது தூத்துக்குடி கலவர விவகாரத்தின் கோணத்தை திடீர் திருப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர்கள் அளித்த புகாரில் அதிர்ச்சி தரும் சில உண்மைகளை போட்டு உடைத்துள்ளனர். ”வன்முறையில்லா அறப்போராட்டமாக நடந்து கொண்டிருந்த இப்பிரச்னையில் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பை சேர்ந்த வக்கீல்கள் அரிராகவன், வாஞ்சிநாதன் ஆகியோர் கிராமங்களில் ஊடுருவி ஏப்ரல் 23ல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மனு அளிக்கும் போராட்டம் அறிவித்து, மக்களை திரட்டி ஊர்வலமாக சென்று முன்னின்று மனு அளித்தார்கள். மே.1 அன்று கிராம பஞ்சாயத்து கூடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் போதும். உடனே ஸ்டெர்லைட்டை மூடி விடலாம் என்று பரப்புரை  செய்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பல்வேறு இடங்களில் குறிப்பாக மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் மாதா கோவில் பகுதி, பாத்திமா நகர், புதுத்தெரு, குரூஸ்புரம், திரேஸ்புரம் ஆகிய பகுதிகளிலும் அந்த வக்கீல்கள் மே.22ல் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்க நேரடியாக பிரசாரம் செய்ததும் மறைக்க முடியாத உண்மை“ என தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் சில தகவல்களையும் வெட்ட வெளிச்சமாக கூறியுள்ளனர். மே.20ல் மாவட்ட எஸ்பி தலைமையில் மீனவ அமைப்பின் தலைவர்களை அழைத்து இப்பிரச்னை தொடர்பாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் மே.22ல் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கில் எஸ்ஏவி மைதானத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்ட போது கூட, வணிகர் மற்றும் இதர தொழில் அமைப்புகளோடு இணைந்து தாங்களும் செயல்படுவோம் என்று உறுதியளித்தது அதன்படியே நடந்து கொண்டோம்.
ஆனால் வக்கீல்கள் அரிராகவன், வாஞ்சிநாதன் ஆகியோர் சமூக வலைதளங்களில் காணொளிகள் மூலமும், பொதுமக்கள் அமர்ந்திருந்த போராட்ட களங்களில் நேரடியாகவும், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மனதிலும் எதிர் கருத்துக்களை பரப்பி, உணர்வுகளைத் தூண்டி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதே நம்முடைய ஒரே நோக்கம் என்று முழக்கமிட்டு காவல்துறையின் அடக்கு முறைகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று பெண்களையும் வீரவசனம் பேசவைத்து வேடிக்கை பார்த்தனர் என்பதற்கு எங்களிடம் பல வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் உள்ளன.
மேலும் “ஏப்ரல் 23ல் மனு அளிக்க வழிநடத்தியது போலவே, மே.22லும் வழிநடத்தி செல்வார்கள் என்று நம்பியே மீனவ மக்களும், பொதுமக்களும் கடைசிநேர காணொலி காட்சிகளை நம்பி திரளாக கிளம்பினர். மீனவ அமைப்புகளின் கட்டுப்பாடுகளை உடைத்து மாதா கோவிலில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட செய்யும் வரை பொதுமக்களோடு இருந்த இந்த திடீர் தலைவர்கள் (போலி போராளிகள்) துப்பாக்கி சூடு நடந்த போதும், அதன் பிறகும் எங்கே இருந்தார்கள்? கலவர தினத்தில் இவர்களால் உணர்வுகள் செறிவூட்டப்பட்ட மக்கள் கூட்டத்தை கட்டுக்கோப்பாக நடத்திச் செல்லாமல் எங்கே சென்றார்கள்? இந்த திடீர் தலைவர்களில் (போலி போராளிகள்) ஒருவருக்கு கூட சிறு காயம் ஏற்படவில்லையே எப்படி?“ என்றெல்லாம் அந்த புகாரில் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
ஆகமொத்தம் இந்த மே.22 போராட்டம் என்பது திட்டவட்டமாக ஏற்கனவே மக்கள் அதிகாரம் மற்றும் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளின் சதித்திட்டத்துடன் அரங்கேறிய வெறியாட்டம் என்பதும், போலி பிரசார யுக்திகளால் மக்களை மோசம் போக்கி மூளைச்சலவை செய்து நடத்தப்பட்ட வன்முறை என்பதும் புலனாக தொடங்கியுள்ளது. இந்த தகவலை ஏற்கனவே செய்தி.காம் என்ற இணைய தள ஊடகம் முதன்முதலாக அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அதன் பின்னர் நியூஸ் எக்ஸ் என்ற பிரபல ஆங்கில தொலைக்காட்சியும் இந்த கலவரத்தின் பின்னணியில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மர்க்கி மாவோயிஸ்டுகளின் பங்களிப்பு இருப்பதாகவும், மக்கள் அதிகாரம் என்ற அமைப்பே இவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பகிரங்கப்படுத்தியது. அடுத்தக்கட்ட அதிர்ச்சியாக ஓய்வு பெற்ற எஸ்பி அசோக் குமார் கடந்த ஜூன் 13ம் தேதி துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ற தலைப்பில் தமிழ் இந்து நாளிதழில் எழுதிய தலையங்கத்தில் சமூக விரோதிகள் எப்படியெல்லாம் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த கலவரத்தை அரங்கேற்ற திட்டம் நிறைவேற்றினார்கள் என்பதை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து எழுதியிருந்தார்.
இதற்கெல்லாம் மேலாக நடிகர் ரஜினியின் தூத்துக்குடி பிரவேசம், அவரது பேச்சு திடீர் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது என்றாலும், இந்த கலவரத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்ற ஆவேசத்தை வெளிப்படுத்திய போது புரியாத உண்மை தற்போது பட்டவர்த்தனமாக வெடித்துள்ளது. ரஜினியின் பேச்சுக்கு எதிராக கொந்தளித்த அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பினர் எல்லாம் தற்போது வாயடைத்துப் போய் உள்ளனர்.
இவையெல்லாம் மக்கள் மத்தியில் தங்களை மோசம் போக்கிய போலி போராளிகள் பற்றிய உண்மையை உணரவைத்தது. நேரடியாக போராட்ட களத்தில் பாதிக்கப்பட்டவர்களும் சுதாரிக்கத் தொடங்கி கலவரத்தின் பின்னணியை ஆராயத்தொடங்கியதின் விளைவு தாங்கள் சில சுயலாப நோக்கர்களால் ஏமாற்றப்பட்டதை உட்கிரகிக்க தொடங்கி உண்மையை உரக்கச் சொல்ல தொடங்கியுள்ளனர். இனிமேலும் போலி போராளிகளின் பரப்புரைகளுக்கு ஒருநாளும் அடிமையாகக் கூடாது, உணர்ச்சிகளை உசுப்பேற்றி மக்களை அடமானம் வைக்கும் எவரையும் தூத்துக்குடிக்குள் நுழைய விடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவுறத் தொடங்கி விட்டனர். விரைவில் தூத்துக்குடியில் நடந்த கலவரத்தின் பின்னணி மர்மம் முற்றிலுமாக விலகும் என்று பொதுநல நோக்கர்கள் காத்திருக்கின்றனர்.
 

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending