2018 மே 22ம் தேதி அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது. தமிழக வரலாற்றில் அது கருப்பு நாள். ஸ்டெர்லைட் ஆலையை நிரத்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு (?) போராட்ட குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு முந்தைய நாளே 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது. போராட்ட நாளான்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பனிமயமாதா பேராலயத்தில் தொடங்கிய பேரணியை விவிடி சிக்னல் அருகே காவல்துறையால் தடுக்கப்பட்டது. தடையை மீறி பேரணி முன்னேற, ஒரு கட்டத்தில் திடீரென கல்வீச்சு தாக்குதல் நடந்தது.
இதனால் காவல்துறையினர் பின் வாங்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த கும்பல் அங்கிருந்த இருசக்கர வாகனங்களை தீ வைத்தது. மேலும், காவல்துறையின் வாகனங்களுக்கு சேதப்படுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்களுக்கும் ஒரு கும்பல் தீ வைத்தது.
கலவரத்தில் நடந்த தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் தீவிரவாதிகள் ஊடுருவல் தான். தமிழகத்தில் நான் ஏற்கனவே கூறியபடி தீவிரவாதிகள் புகுந்துள்ளனர் என தனது கருத்தை ஆழமாக பதிவு செய்தார்.
இதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மக்களின் உணர்வு போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டார் என கூக்குரலிட்டனர். ஆனால், இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், சிபிசிஐடி போலீசாரின் கைகளில் கைத்துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், சிவப்பு பாஸ்பரஸ் இருந்தற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுவருவல் என மத்திய இணை அமைச்சர் கூறியது உண்மை என்று புலப்படுகிறது.
மீனவ மக்கள் அப்பாவிகள். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். அப்படி நம்பி விட்டால் எது நடந்தாலும், பின் வாங்க மாட்டார்கள். இதை தான் ஒரு கும்பல் பயன்படுத்தி உள்ளது.
கைத்துப்பாக்கி, சிவப்பு பாஸ்பரஸ், நாட்டு வெடிகுண்டுகள் என அளவுக்கு மீறி செலவு செய்துள்ளது. இங்கு அளவுக்கு மீறி என்பது, இதனை செயல்படுத்த அவர்கள் வகுத்த திட்டம், அதை அவர்கள் பாதை மாறாமல் மக்களிடம் கொண்டு சென்று மூளை சலவை செய்தது என அனைத்து கச்சிதமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுக்கு எந்தவித காயமும் இல்லை. தற்போது அவர்கள் வாங்கி காசுக்கு கூவிவிட்டு தலைமறைவான வாழ்க்கைக்கு சென்றுவிட்டனர். அல்லது அடுத்த போராட்டத்துக்கு தூண்டி விடுபவர்களிடம் கூலி வாங்கி கொண்டு திட்டம் தீட்ட சென்று விட்டார்களோ தெரியவில்லை.
அவர்களது திட்டம் இந்திய பொருளாதாரத்தை சீரழிப்பது தான். சொந்த நாட்டில் இருந்து கொண்டு, அந்நிய நாட்டு ஏஜென்டிடம் கைக்கூலி பெற்று, அப்பாவி மக்களை பகடையாக்கி திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில், அவர்கள் சொகுசு பங்களாவுக்குள் அடைக்கலமாகி விட்டனர்.
தற்போது தான் அதன் தாக்கம் மீனவ மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. எங்களிடம் எது ஆயுதம் என்ற புலம்பலும் கேட்க தொடங்கி உள்ளது. சிபிசிஐடி போலீசார் விசாரணை முடிவுக்கு வரும்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான குள்ளநரிகளின் வேஷமும் கலைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.