தூத்துக்குடி நகர வர்த்தகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அந்த பிள்ளையாரின் பெயரை
கொண்ட தொழில் அதிபர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியமானவர்களில்
ஒருவராகவும் இருந்தவர். இந்த போராட்டத்தை வீரியம் பெறச் செய்ய பல விதங்களிலும் நிதியுதவி
அளித்துள்ளார். வர்த்தகராக இருக்கும் ஒருவர் பல தொழிற்சாலைகளின் பூர்வாங்க பணிகள் மற்றும்
அதன் சாதக பாதகங்கள் தெரிந்த ஒருவர் எதற்காக தனிப்பட்ட முறையில் ஸ்டெர்லைட் என்ற தொழிற்சாலையை
எதிர்த்து போராட வேண்டும்?
தூத்துக்குடி கடைவீதியில் மட்டுமல்லாது தென்மாவட்டங்களில்
பல இடங்களிலும் தனது ஆடம்பர பொருட்கள் விற்பனை மையத்தை தொடங்கி வியாபாரத்திலும், லாபத்திலும்
கொடிகட்டி பறக்கும் இவர் தானும் ஒரு தொழில் அதிபர் என்பதை மறந்து இன்னொரு தொழிற்சாலையை
முடக்கத்துடிப்பது ஏன்? இந்தியாவின் தாமிர தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து உலகச்சந்தையில்
நாட்டின் அந்நிய செலாவணியையும் மதிப்பையும் உயர்த்தும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து திடீரென
போராட்டத்தில் குதித்தது ஏன்? என அவரைச் சார்ந்த வர்த்தகர்கள் மத்தியில் மட்டுமல்லாது,
தூத்துக்குடி கலவரத்திற்கு பின்னர் மக்கள் மத்தியிலும் பெரிய வினாவை எழுப்பியுள்ளது.
அந்த தொழில்அதிபர் அங்கம் வகிக்கும் இன்னபிற அமைப்புகளிலும்
அரசல் புரசலாக இந்த சர்ச்சை விசுவரூபம் எடுத்து வருகிறது. இதற்கு பின்னணியில் ஏதோவொரு
நெருடல் இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள். தொழில் அதிபரின் பின்னணியைப்
பற்றி விசாரித்ததில் சில தகவல்கள் சாதக பாதகமாக வெளியே வந்தன.
தூத்துக்குடியில் மிகவும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த
குடும்பம் இவர்களுடையது. இவரது தந்தையின் பெயரைத் தெரியாதவர்கள் ஊருக்குள் இருக்க முடியாது.
அத்தனை பிரபலம். கடும் உழைப்பு மூலம் பல தொழில்கள் வாயிலாக முன்னேற்றத்தை அடைந்தவர்.
பல அடைமொழிகளோடு பொதுமக்களும் இவரை இன்றளவும் மக்கள் போற்றத்தான் செய்கிறார்கள். இவரது
மூத்த மகன்தான் அந்த குறிப்பிட்ட தொழில் அதிபர். ஆரம்பத்தில் தந்தைக்கு தொழிலில் உதவியாக
இருந்தவர் தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் அந்த தொழில் நிறுவனங்களுக்கு தலைவரானார்.
தந்தையைப் போல் அல்லாமல் வியாபாரத்தில் சில சில திரைமறைவு
தில்லு முல்லு வேலைகளை செய்து குறுகிய காலத்தில் பெரிய முன்னேற்றத்தை அடைந்ததாக ஊர்மக்கள்
அரசல் புரசலாக பொதுமக்கள் செவிவழிச் செய்தியாக பேசுவது உண்டு. இவர் சார்ந்திருக்கும் அமைப்புகளிலும்
இந்த சர்ச்சை நிலவத்தான் செய்கிறது. ஒரு விதத்தில் தன்னை சட்டரீதியாக பாதுகாத்துக்
கொள்வதற்காக பற்பல பொது அமைப்புகள், சமூக போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு
அந்த பதவிகள் மூலம் அரசு வட்டத்திலும், தொழில்
வட்டத்திலும் தனது தேவைகளை அரங்கேற்றிக் கொள்வதில் அரசியல்வாதிகளை மிஞ்சிவிடுவார்.
அதே
தோரணையோடுதான் இவர் ஸ்டெர்லைட் ஆலையில் தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டுவதற்காக
ஏராளமான நபர்களை நிரந்தர பணிக்கு அந்நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனால் அவரது
எண்ணப்படி அந்நிறுவனம் ஆட்களை ஏற்றுக் கொள்ள வில்லை. சரியான கல்வித் தகுதி, தொழிற்
தகுதியில்லாமல் ஆட்களை நியமிக்க வாய்ப்பில்லை என ஸ்டெர்லைட் நிர்வாகம் திட்டவட்டமாக
தெளிவுபடுத்தியது. இதுவே ஸ்டெர்லைட் மீதான அதிருப்தியை இவருக்கு முதன் முதலில் ஏற்படுத்தியது.
சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிராக பல வகைகளிலும் செயல்படத்
தொடங்கினார். அதேபோல் தான் பதவி வகிக்கும் அமைப்பு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு நிதி
அளிக்க கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அணுகி பெரும் தொகையை கேட்டபோது இவ்வளவு பெரிய
தொகையை அளிக்க முடியாது என கூறியதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் அந்த தொழில்
அதிபர்.
தருணத்தை
எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த தொழில் அதிபருக்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தொடர்
போராட்டம் கைகொடுத்தது. போலி போராளிகளாக களமிறங்கிய நித்யானந்த் ஜெயராம், பியூஷ் மானூஷ்
ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. பன்னாட்டு நிதியும் தாராளமாக கைகளில் புழங்க தொடங்கியது.
மே.22 கலவரத்திற்கு முன்னதாக ஏற்கனவே மார்ச் 24ல் ஸ்டெர்லைட் ஆலை முன்பு பெருந்திரள்
ஆர்ப்பாட்டம் அறிவித்ததும், அதற்கு முந்தைய தினத்தில் தனக்குத்தானே விளம்பரம் தேடிக்கொள்வதற்காக
தனது வீட்டில் மர்ம நபர்கள் கல்வீச்சு நடத்தியதாக நாடகமாடிக் கொண்டார். போலீசாருக்கு
இது நாடகமென அப்பட்டமாக தெரிந்தாலும், ஊரில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பதால்
பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை.
தூத்துக்குடி
கலவரத்திற்கு பிறகு இதன் பின்னணியில் கூட்டாக சதி செய்து செயல்பட்டவர்கள் பட்டியலில்
யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற விசாரணையை தீவிரப்படுத்திய போதுதான் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அதில் பிள்ளையாரின் பெயர் கொண்ட தொழி அதிபரின் பெயரும் முதன்மை பெற்றிருந்தது. அதே
சமயத்தில் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை பெற்றிருப்பதும் பொருளாதார
குற்றப்பிரிவு போலீசாரின் காதுகளுக்கு எட்டியது. அதனடிப்படையில் போலீசார் பல கோணங்களில்
விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வருமானவரித்துறை, விற்பனை வரித்துறை என விசாரணை
வளையம் விரிந்து கொண்டே செல்கிறது.
இதேபோல்
தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்த சமயத்தில் பொருளாதார
வளர்ச்சியில் கொழித்த நபர்களையும் அடையாளம் காணத் துவங்கியுள்ளனர். விசாரணை முடிவில்
பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தகவல்கள் தூத்துக்குடி நகர மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பரபரப்பையும்,
தங்களை எப்படியெல்லாம் போராட்டத்தை வழிநடத்தியவர்கள் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற
அதிருப்தியையும், முகச்சுளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
------------------------------------
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.