நியூஸ்
எக்ஸ் ஆங்கில தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய
அந்த அதிர்ச்சி தரும் செய்திப்பதிவில் தூத்துக்குடி கலவரத்துக்கும், மாவோயிஸ்ட்டுக்கும்
உள்ள தொடர்புகளை புட்டு புட்டு வைத்து விட்டார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தை நக்சலைட்டுகளின்
கூடாரம் என அழைப்பது உண்டு. அந்த மாநிலத்தின் ராய்ப்பூரை அடுத்துள்ள கான்கர் என்ற பகுதியில்
நக்சலைட்டுக்கள் சிலரை இன்டெலிஜென்ஸ் என கூறப்படும் நுண்ணறிவு போலீசார் கைது செய்த
போது அவர்கள் கையில் இருந்து கைப்பற்றிய சில ஆவணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அவர்கள் அச்சிட்டிருந்த போஸ்டர்களில் தூத்துக்குடி கலவரத்தைப் பற்றிய வாசகங்களும், அவர்களிடம் இருந்து பறிமுதல்
செய்த லேப்டாப்பில் கலவரம் தொடர்பான முக்கிய ஆவணங்களும் இருந்தது தெரிய வந்தது. இது
காவல்துறை அதிகாரிகளை பேரதிர்வுக்குள் ஆழ்த்தியது. ஒரு கலவரத்திற்கு பின்னால் இத்தனை
பெரிய தொடர்புகளும், கூலிப்படையினரின் கைங்கர்யமும் இருப்பது அதிர்ச்சியின் உச்சத்துக்கே
கொண்டு சென்றது.
இதுபோன்ற
தகவல்களை நுண்ணறிவு போலீசார் உறுதி செய்த பின்னரே தூத்துக்குடி கலவரத்தை இயக்கிய மக்கள்
அதிகாரம் என்ற அமைப்பிற்கும், சத்தீஸ்கர் மாநில நக்சலைட்டுக்களுக்கும் தொடர்பு இருப்பது
தெரியவந்தது. அதன் அடிப்படையில்தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அந்த இயக்கத்தை சேர்ந்த
6 பேரை கைது செய்துள்ளனர்.
அதுமட்டுமல்ல
கடந்த ஜூன் 13ம் தேதி தமிழ் இந்து நாளிதழின் தலையங்கத்தில் ஓய்வுபெற்ற எஸ்பி அசோக்குமார்
தனது கட்டுரையில் இந்த கலவரத்தை எப்படியெல்லாம் இயக்குவது என்பது பற்றியெல்லாம் முகநூல்
மற்றும் சோசியல் மீடியாக்களில் தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட திட்ட யோசனைகள், கலந்துரையாடல்கள்
எல்லாவற்றையும் பகிரங்கமாக அம்பலப்படுத்தியது. அந்த செய்தியானது கலவரம் தொடர்பாக மாற்றுக்
கருத்து கொண்டவர்களுக்கு உண்மையை உணர்த்த தொடங்கியது. இதே மாதிரிதான் தூத்துக்குடிக்கு
வந்த ரஜினிகாந்த் சொன்ன கருத்தும். ஆழமான சிந்தனையோடு எப்படி அப்படி ஒரு உண்மையை திருஷ்டாந்திரமாக
சொன்னார் என்பது அரசியல் நோக்கர்களை வியப்படைய செய்திருக்கிறது. கூட்டத்தில் சமூக விரோதிகள்
புகுந்துதான் அந்த போராட்டத்தை கலவரமாக மாற்றினார்கள் என்ற வார்த்தை உள்ளடியே உண்மைதான்
என்பதை உலகறியச் செய்துள்ளது.

No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.