6/05/2018

புற்றுநோயின் அடிகோலி பிளாஸ்டிக் எனும் எமன்: அக்கறை காட்ட மறுக்கும் பொதுஜனம்




கேன்சர் இந்த மண்ணில் புற்றீசலாய் பெருக மூலக்காரணமே இந்த நெகிழியின் (பிளாஸ்டிக்) உற்பத்தியும் பயன்பாடுகளும்தான்... மனித பயன்பாடுகளில் எப்போது நெகிழி புகுந்ததோ அன்றே மனி இனத்தின் இயற்கையின் அழிவு நிதர்சனமானது.

100 சதவீதம் இதுதான் காரணம் என அறுதியிட்டு உறுதியிட்டு கூறிய பின்னரும் எது எதற்கோ மக்கள் போராடுகிறார்கள்... நெகிழி விஷயத்தில் அக்கறை காட்ட மறுக்கிறார்கள்... விழிப்புணர்வு இல்லையா அல்லது போராட மனமில்லையா?



உலக சுகாதார நிறுவனம் அறிவித்த தினங்களை மட்டும் தவறாமல் சிதறாமல் நாடு முழுவதும் கடைபிடிக்கின்றனர். இன்று (05.06.2018) உலக சுற்றுச்சூழல் தினமாம். மரக்கன்று நடுவதற்கு மன்றாடுவதும், பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு கெஞ்சுவதுமாக நாடும் நாட்டு மக்களும் புரிதல் இல்லாமலேயே நுகர்வு செய்கின்றனர்.



புற்றுநோயை முதலில் ஒழிக்க வேண்டுமானால் நெகிழி இந்த மண்ணில் இருந்து எடுபட வேண்டும். உணவுக்கூடங்கள், தேநீர் நிலையம், மளிகை கடை என மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களில் வியாபித்து கிடக்கும் பிளாஸ்டிக்கை அறவே அகற்ற வேண்டும்.



நெகிழி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தடை செய்து பயன்பாட்டை குறைத்து படிப்படியாக ஒழித்தாலே போதும் கேன்சர் என்னும் அரக்கனை படிப்படியாக கொன்று விடலாம்!

------------------------
(கடையத்தான்)
------------------------

No comments:

Post a Comment

Thank you for your valuable feedback.

யாரும் ஓடிடக்கூடாது 😝 Content ஆக மாறிய CM Joseph Vijay | TVK | TN Assembly | Trending