ஒழுக்க விழுமியங்களில் தழைத்திருப்போம்!
விருப்பப்படியெல்லாம் வாழலாம் என்று நினைத்தால் எப்படியெல்லாமோ வாழ்ந்து விடலாம். இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழத் தொடங்குவதில்தான் வேதனைகளும், சோதனைகளும் பின் தொடரும்..! இது எதார்த்தம்தான்! கண்டபடியெல்லாம் வாழ மனமும் மனசாட்சியும் இடம் கொடுப்பதில்லை..! சுற்றியிருப்பவர்களை பார்த்துக் கொண்டு நாமும் இப்படியெல்லாம் இருந்தால் என்ன? எப்படி இப்படி வாழ்கிறார்கள்? இது சாத்தியமா? என்றெல்லாம் மனம் நினைக்க வைக்கும்!
அந்த நிலையை தாண்டி வருவதில்தான் நமது மனவலிமை வெளிப்படும். நமது சுயம் நமக்கு கட்டுப்படும்..! அடுத்தவர்களின் வாழ்வியலை பார்த்து நமக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? நமது மனசாட்சிக்கு எது உயர்ந்ததென படுகிறதோ அதுவே நமது வாழ்வின் அடையாளத்தை பிரதிபலிக்கும்.
வாழ்கிற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்க வேண்டும்! அதுவே நமது உயர்ந்த லட்சியமாக இருக்கட்டும்! கலாச்சார, பண்பாட்டு ஒழுக்க விழுமியங்களில் தழைத்திருப்போம்! நமக்கான அடையாளம் இதுவென சுற்றமும் முற்றமும் உணருங்கால் வரும்..!

---------------------
(கடையத்தான்)
---------------------
(கடையத்தான்)
---------------------
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.