உயிரை துச்சமாக மதிக்கும் பத்திரிக்கையாளர்கள்...
பத்திரிக்கையாளர்களை விமர்சனம் செய்பவர்களுக்காக இந்தப்பதிவு...
கூடங்குளம் அணுஉலை, கெயில் திட்டம், நியூட்ரினோ திட்டம், தற்போது ஸ்டெர்லைட் போராட்டம் இப்படி எந்த பிரச்னை என்றாலும் உடனடியாக போராட்ட களத்தில் இருந்து கொண்டு முதலில் சாடுவது பத்திரிக்கையாளர்களைத்தான்... இந்த கையாலாகாதத் தனத்தை அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும்போதே பிடுங்கி எறிந்திருந்தால் இந்த போராட்டங்களம் தேவை இருந்திருக்காது... காரணம் ஆட்சியாளர்களை கேள்வி கேட்க துப்பிருக்காது... சொந்த தொகுதி எம்எல்ஏ.... ஏன் கவுன்சிலர் காரைக்கூட வழிமறித்து சட்டையை பிடித்து கேள்வி கேட்க மக்களால் முடியாது... மூச்சு திணறும் உச்சக்கட்ட நேரத்தில் நச்சு வாயு அது இதுவென அங்கலாய்க்கிறீர்கள்... நீங்கள் வசிக்கும் அதே ஊரில்தான் போராட்ட தளத்திற்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிக்கையாளனும் அதே தெருவில் குடும்பம் குழந்தை குட்டிகளுடன் வசிக்கிறான்... அதே நச்சு வாயுவை சுவாசிக்கிறான்... உங்களுக்கு கேன்சர் வந்தால் அவனுக்கு மட்டும் என்ன ஆரோக்கியம் தனியாகவா கிடைத்து விட போகிறது... மழை வெயில் குளிர் என பத்திரிக்கையாளன் பார்ப்பதே இல்லை... கூடங்குளம் அணு உலை பிரச்னையின் போது செய்தி சேகரிக்க சென்ற என் போன்ற மற்ற நட்பு பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுப்பாருங்கள்.... உயிரைக் கையில் பிடித்தவாறு எத்தனை நாட்களை கழித்தோம் என்று... மக்கள் என்ன எங்களுக்கு மகுடமா சூட்டி விட்டார்கள்... நிர்வாகம் எங்களை பாராட்டி அள்ளி அள்ளி கொடுத்ததா? கச்சத்தீவு போராட்டம், ஒகேனக்கல் போராட்டம் என ஒவ்வொன்றிலும் உயிருக்கு மதிப்பளிக்காமல் உறக்கத்தை கெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிக்கொணர போரடியவர்கள் இந்த பத்திரிக்கையாளர்களே! நீங்கள் நச்சு மண்ணில் வாழ்கையில் அவன் மட்டும் என்ன வானத்தில் இருந்து தொப்பென்று விழுந்தா செய்தி சேகரிக்க வருகிறான்? நீங்கள் சாப்பிடும் அதே உணவு, குடிநீர், காற்று எல்லாமே உங்களுடன்தான்... எந்த போராட்டம் நடந்தாலும் பத்திரிக்கையாளனை குற்றம் சொல்வது முறையன்று... சமூகத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாளனின் எத்தனை பேர் வீட்டில் சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடுகிறார்கள் என யாரேனும் கவலை கொண்டதுண்டா? ஊதியமே இல்லாமல் ஊருக்காக உழைக்கும் வறுமைக்குப் புலவனாக வாழும் பத்திரிக்கையாளர் சமுதாயத்தைப் பற்றி தரக்குறைவாக மதிப்பிடாதீர்கள்... கொலை மிரட்டல்கள், தாதாக்களின் உருட்டல்கள், அரசியல்வாதிகளின் எதிர்ப்புகள், மணல் மாபியாக்கள் ஏற்படுத்தும் மரணபீதி என எல்லாவற்றையும் சந்தித்த பின்னரே பெரும்பாலான செய்திகள் வெளிவருகிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்... உங்கள் தெருவில் சாக்கடை அடைத்தாலும் சமூகத்தில் விரும்பத்தகாதவை நடந்தாலும் அரசு எந்திரங்கள் வரும்முன்னரே வந்து உங்கள் குரலை எங்கள் எழுத்தில் சொல்பவன்தான் பத்திரிக்கையாளன்... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய் நிகழும் சம்பவங்களுக்கு பத்திரிக்கையாளர்களின் பெயர்களை பலிகடா ஆக்காதீர்கள்!
இந்தப்பதிவு உள்ளபடியே பத்திரிக்கையாளனின் நிலைமையை விளக்குவதில் கோடி பங்கில் ஒரு பகுதியே....
---------------------
(கடையத்தான்)
---------------------
(கடையத்தான்)
---------------------
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.