தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தரப்பு நியாயம் ஒருவழியாக பசுமை தீர்ப்பாயத்தின் செவிகளில் எட்டியுள்ளது. இதற்கு காரணம் ஆலை மூடலுக்கு பிறகு தூத்துக்குடி மக்கள் சந்தித்த பொருளாதார இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு, வாழ்வாதார பாதிப்பு போன்றவையே. ஸ்டெர்லைட் ஆலையைப்பற்றி அதற்கு எதிரானவர்கள் பலவாறாக ஆபத்து நிறைந்ததாகவும், உயிர்க்கொல்லி நோய்களை பரப்புவதாகவும், நிலம் நீரை மாசுபடுத்துவதாகவும் வதந்திகளை பரப்பி அதன் இயக்கத்தை முடக்கினாலும், ஆலை முடக்கத்திற்கு பின் அத்தகைய வதந்திகளில் எள்ளளவும் உண்மை இல்லை என மக்கள் புரிந்து கொண்டதன் விளைவு ஆலையை திறக்க வலியுறுத்தி கிராமம் கிராமமாக திரண்டு வந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திலும், தமிழக அரசுக்கும் மனுக்களை அளித்து வருகின்றனர்.
ஆலை இயக்கத்தைப்பற்றிய அறிவியல் ரீதியான உண்மைகளை அடித்தட்டு மக்களும் உணரத் தொடங்கியதன் விளைவு போலி போராளிகளின் செயல்பாடுகளுக்கு சாவுமணி அடித்ததைப் போலாகி விட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அளவுக்கு அதிகமாக வெளிவரும் எஸ்ஓ2 (கந்தக டை ஆக்சைடு) என்ற வாயுவால் கேன்சர் என்ற அதிபயங்கர நோய் பரவுவதாக ஒரு குற்றச்சாட்டை மக்கள் மத்தியில் முன்வைத்தார்கள். ஆனால் தற்போது தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்திற்கு பிறகு ஆலை செயல்பாடு முற்றிலுமாக நின்று போனது. இருந்தபோதிலும் ஆலை மூடுவதற்கு முன்பு தூத்துக்குடி நகர்ப்பகுதியில் எந்த அளவிற்கு எஸ்ஓ2 பரவல் இருந்ததோ, தற்போதும் அதே அளவில் வாயுப்பரவல் தொடர்வதாக ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளது. ஆகவே ஸ்டெர்லைட் ஆலைக்கும், அதிகப்படியான எஸ்ஓ2 பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மக்கள் அரங்கில் நிரூபணமாகி உள்ளது.
22 ஆண்டுகாலமாக தூத்துக்குடி மண்ணில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்லாது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையையும் நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றியது என்பதை எவராலும் மறுக்க இயலாது. மக்கள் நலனுக்காகவும் ஆலை தரப்பு பல்வேறு திட்ட செயல்பாடுகளை மேற்கொண்டதை மறக்க இயலாது. மக்களோடு மக்களாக இணைந்தே இந்த ஆலை இத்தனை காலமும் செயல்பட்டத்தை நடுநிலையாளர்கள் அதன் இயக்கம் நின்று போன பிறகு நன்கு உற்றுநோக்கத் தொடங்கியுள்ளனர்.
நிலத்தை பாழ்படுத்தியதில் பெரும்பங்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும் மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளுக்கும், மாவட்டம் முழுமையும் பரவிக்கிடக்கும் உப்பளங்கள் நூற்றாண்டுகாலமாக மண்ணில் ஆழவேர் பரப்பும் உவர்ப்புச்சார ஊடுருவலுக்கும் உண்டு என்பதை அறிவியலின் துணை கொண்டு உருவான விழிப்புணர்வு மக்களை ஸ்டெர்லைட் ஆலை தரப்பு நியாயத்தை உணரச் செய்துள்ளது. வீட்டுக்கு வீடு ஆள்துளை கிணறுகள் (போர்வெல்), இல்லம்தோறும் கழிப்பறை தொட்டிகள் (செப்டிக் டேங்க்) என எண்ணிக்கையில் லட்சக்கணக்கில் பரவிக் கொண்டே இருக்க மண்ணில் நிலை கொள்ளும் கழிப்பறை தொட்டிகளின் எச்சங்கள் மெல்லவே மண்ணை மாசு படுத்தி நிலத்தடிநீரின் நிறத்தை மஞ்சளும், பச்சையுமாக மாற்றிக் கொடுப்பதையெல்லாம் ஆலையின் கழிவாகவே போலி போராளிகள் பரப்புரை செய்து விட்டதை அறிவியலாளர்களும் ஒப்புக் கொண்டு விட்டனர். மருத்துவ ரீதியாக இத்தகைய தண்ணீர் பலவித நோய்களை பரப்பும் என்பதை சிகிச்சை நிபுணர்களும் வழிமொழிகின்றனர்.
மற்றொரு பேருண்மையையும் புவியியலாளர்கள் முன்வைக்கிறார்கள். பூகோள அடிப்படையில் புயல்தாக்காத மையத்திலேயே தூத்துக்குடி நகரமானது தனது அமைவிடத்தைக் கொண்டுள்ளது. கடலை ஒட்டி அமைந்துள்ள தூத்துக்குடி நகரத்திற்கு கடலில் இருந்தே காற்றானது மேற்கும், வடமேற்கு திசையுமாக வீசுகின்றது. நகரத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கிழக்கு நோக்கியவாறு காற்றோ, காற்று மாசுக்களோ அதாவது நகரப்பகுதிகளை கடந்து மக்களை பாதித்தவாறு எந்தவாயுவும் கடலை நோக்கி பரவுவதற்கு வாய்ப்பே இல்லை. அவ்வாறு இருக்க நகரவாசிகளுக்கு இந்த ஆலையால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தோல் அரிச்சல் என எதுவுமே ஏற்பட வாய்ப்பில்லை.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எஸ்ஓ2 வாயுவே வெளிவருகிறது என வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் அது தூத்துக்குடி நகரத்திற்குள் பரவுவதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை. கடலை ஒட்டி நெருக்கமாக அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் வாயுக்கள் காற்றின் திசை வேகத்தில் நகரத்திற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதே தவிர, நகரத்திற்கு வெளியே செயல்படும் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் வாயுக்கள் கடல்காற்றின் வேகத்தை கிழித்துக் கொண்டு கடலைநோக்கி பயணம் செய்ய முடியாது. இதுவே புவியியலாளர்கள் உறுதிபட உரைக்கும் செய்தி. எனவே ஸ்டெர்லைட் ஆலை வாயுவால் மக்கள் உடல்நலனுக்கு ஊறு என்ற கூற்றும் போலி போராளிகளின் வதந்தியே என பகிரங்கமாகி விட்டது.
விஞ்ஞானம் நாளுக்கு நாள் புதுப்புது விந்தையை அறிமுகப்படுத்துகிறது. ஆரம்பத்தில் கடுமையாக புகையை வெளியேற்றிய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தற்போது புகையை வெளியிடுவதில்லை. விஞ்ஞானத்தில் முன்னேறிய தொழில்நுட்பம். நகரும் பொருட்களில் உட்புகுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை தொழிற்சாலைகளில் நிறுவ விஞ்ஞானத்தில் சாத்தியம் கிடையாதா? என்பதே தொழிற்சாலை தரப்பினரின் கேள்வி. காலத்தின் ஓட்டத்தில் அதன் தேவைக்கேற்ப மக்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பில்லாத வகையில் புகை மாசில்லா தொழில்நுட்பம் ஏற்கனவே செயல்படும் தொழிற்சாலைகளிலும், புதிதாக தொடங்கப்படும் தொழில் ஆலைகளிலும் பிரயோகிக்கப்பட மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை கண்காணித்து வருகிறது.
மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும், சுற்றுச்சூழல் துறையும் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு கண்காணித்து உரிய அனுமதிக்குப் பிறகே தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கின்றனர். ஆனால் தொழிற்சாலைகளுக்கு எல்லாம் முன்னோடியாகவே ஸ்டெர்லைட் ஆலையில் ஸீரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற திட்டத்தை செயலாக்கம் செய்து வெற்றிகரமாக கழிவுகள் வெளியேறாத தொழிற்சாலையாக மாற்றி இயக்கி வருகின்றனர்.
ஆலைக்கழிவுகளை பல கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் அமைத்து கடலில் உட் செலுத்துவதோ, மண்ணுக்குள் நேரடியாக கொட்டுவதோ இல்லை. மண்ணுக்குள் ராட்சத கிடங்குகளை ஏற்படுத்தி மண்ணில் கழிவுகள் வெளியேறாதவாறு உலோகத்தால் சுவர் எழுப்பி அதில் மறுசுழற்சி அடிப்படையில் தாமிர தயாரிப்பு கழிவுகளை பிரித்து அதில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக சல்ப்யூரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலம் என மாற்றி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான தொழிற்சாலைகளுக்கும், விவசாயிகளின் உரம் மற்றும் இடு பொருட்கள் தேவைகளுக்கான தொழிற்சாலைகளுக்கும், கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் விநியோகித்து வருகின்றனர்.
இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவீதம் தேவையை பூர்த்தி செய்த ஸ்டெர்லைட் ஆலை முடங்கியுள்ளதால் இன்றைய நிலையில் தொழில்துறை சந்தித்து வரும் சவால்கள் பலப்பல. இந்தியாவில் தன்னிறைவாகப் பெற்ற இந்த தாமிரத்தை தற்போதுள்ள கையிருப்பு நிலை கரைந்தபிறகு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி என்ற துர்பாக்கிய கட்டத்திற்கு நகரும் போதுதான் இதன் பாதிப்பும், விலையேற்றங்கள் என்ற தாளமுடியாத சுமையும் மக்கள் மீது திணிக்கப்படும் என்பதை போலி போராளிகள் மக்களுக்கு மறைத்து தங்களது விஷமத்தனமான பிரசாரத்தால் அவர்களை ஏமாற்றி தொழிற்சாலைகளுக்கு எதிராக போராட வைத்து எதிரி நாடுகளின் கையூட்டுகளில் சுகபோக வாழ்க்கை நடத்துகின்றனர்.
அரைகுறை அறிவியல் அறிவோடு அரைவேக்காட்டுத்தனமாக வெளிநாட்டுக் கைக்கூலிக்கு ஆசைப்பட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற அடைமொழியோடு போலியாக வலம் வரும் நித்யானந்த் ஜெயராம், பசுமை ஆர்வலர் என்ற பகட்டோடு கட்டப்பஞ்சாயத்து செய்து தொழில் நிறுவனங்களிடம் இருந்து பணம் பறிக்கும் பியூஷ்மானூஷ் போன்ற போலி போராளிகளின் பேச்சில் உண்மை இல்லை என்பதை தூத்துக்குடி மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். இவர்களுடன் இணைந்து தூத்துக்குடி மக்களை போராட்டத்திற்கு வழிநடத்திய உள்ளூர் முக்கியஸ்தர்களையும், மக்கள் நலனுக்காக என்ற பெயரில் ஊருக்குள் ஊடுருவிய அமைப்புகளையும் அடையாளம் கண்டுகொண்டு விட்டனர். அரசியல் தேவை, தேர்தல் களச் செலவு என எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் ஆலையை மிரட்டும் தொனியில் வெற்றுக் கூச்சலிட்ட அரசியல்வாதிகளையும், கட்சிகளையும், இதர அமைப்புகளையும் இனம் கண்டுகொண்டு விட்டனர். இதற்கு மேல் இவர்களது பசப்பு வேலைகள் மக்கள் மத்தியில் எடுபடவாய்ப்பில்லை என்பது நிதர்சனம்.
ஆனால் தற்போதைய தேவையெல்லாம் ஆயிரக்கணக்கான நேரடி, மறைமுக தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அளித்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியே நடுநிலையாளர்கள் மத்தியில் ஆவலாக கிளம்பியுள்ளது. வருமானத்தை இழந்து குடும்பத்தை நடத்த முடியாமலும், குழந்தைகளை வளர்க்க முடியாமலும் மக்கள் படும் சிரமங்கள் அப்பட்டமாக தூத்துக்குடி கிராமப்பகுதிகளில் வேதனையைாக வெளிப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்திலும் வாரந்தோறும் ஆலைக்கு ஆதரவான கூக்குரல்கள் ஒலிக்கின்றன. ஆலை நிர்வாகமும் எந்த நேரத்திலும் தங்களது தொழிற்சாலையை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்து கொள்ளலாம் என்ற சவாலை முன்வைத்து விட்டது. அறிவியலில் தேர்ந்த நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு ஆலையில் குறைகள் இருப்பதாக கண்டறிந்தால் அதனை சரிசெய்யவும் தயார் என்ற அரைகூவலை விடுத்து விட்டது.
வெளிப்படையான நிர்வாகத்திற்கு தயார் என்ற நிலைப்பாடு பசுமைத் தீர்ப்பாயத்தின் கதவுகளை தட்டியுள்ளது. தங்கள் தரப்பு நியாயங்களை பட்டியலிட்டு பசுமைத் தீர்ப்பாயத்திடம் ஆலை நிர்வாகம் நீதி கேட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாகத்தான் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஆலைக்குள் அதிகாரிகளை அனுமதித்துள்ளது. திருஷ்டாந்திரமாக ஒரு அனுமானத்திற்குள் பசுமைத் தீர்ப்பாயம் வந்துள்ளது. அதனடிப்படையில் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளோடு இணைந்து தமிழக அரசும் முக்கிய ஆலோசனைகளை முன்னெடுத்து வருகிறது. மீண்டும் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் செழிக்க உரிய வழிவகைகளை செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும்.
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.