இந்த
போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் பன்னாட்டு சதிவலைகளையும் மக்கள் ஓரளவு தெரிந்து
வைத்திருக்கிறார்கள். ஆலைக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை என்றாலும், ஆலையின்
செயல்பாடுகளைப் பற்றிய தவறான எண்ணங்கள் இன்னமும் மக்கள் மனதில் இருந்து கொண்டுதான்
இருக்கின்றன. இதற்கு காரணம் போலி போராளிகள் ஆலைக்கு எதிரான செயல்பாடுகளை கைவிடாமல்
தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு பொய் பிரசாரத்தை இன்னமும் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்
என்பதுதான். உளவுத்துறையும் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது. மறைமுகமாக மக்கள் பிரதிநிதிகளையும்,
மக்களையும் உஷார்படுத்தி வருகிறது.
ஸ்டெர்லைட்
ஆலை மூடப்பட்ட ஒரு மாதத்திலேயே அதன் விளைவுகளையும், இதனை சார்ந்து நடந்து வந்த தொழில்
பாதிப்புகளையும் பொதுமக்கள் கண்டுணர்ந்து கூட்டம் கூட்டமாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு
படையெடுத்து மனுக்களை கொட்டிக் கொடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலை மூடலால் தங்களது வாழ்வாதாரம்
பாதிக்கப்படுவதாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நடமாடும் மருத்துவ வசதிகள் ஆகியவை
தடைபட்டுள்ளதாகவும், ஆலையால் தங்களுக்கு உடல்நலனிலோ, உடைமைகள் மற்றும் நிலத்திலோ எந்தவித
பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ஆலையை திறக்க ஆவண செய்யுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.
மக்களின்
இந்த கூக்குரலை போலி போராளிகள் வேறு வடிவத்தில் சித்தரித்து காசுக்காக சேர்ந்த கூட்டம்
போல கொச்சைப்படுத்தி மக்களை குழப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். கேன்சருக்கான காரணிகள் ஆயிரமாயிரம் இருந்தாலும் தூத்துக்குடியில்
யார் கேன்சரால் பாதிக்கப்பட்டாலும் அதற்கு ஸ்டெர்லைட்டின் அமைவிடமே காரணம் என மக்களின்
மனதில் ஆழப்பதிய வைத்திருக்கிறார்கள். அறிவியல் உண்மைகள் என்ற பெயரில் அறிவியலுக்கு
சற்றும் பொருத்தமில்லாத காரணிகளை பொய்யான புள்ளி விவரங்களோடு கலந்து மக்களிடம் வதந்திகளை
கிளப்பி வருகிறார்கள்.
ஸ்டெர்லைட்
ஆலையில் சல்பர் டை ஆக்சைடு என்ற நச்சுக்காற்று நிலத்தையும், நிலத்தடி நீரையும், காற்றையும்
பாழ்படுத்துவதோடு கேன்சரை பரப்புவதாக நம்ப வைத்திருக்கிறார்கள். உண்மையில், ஸ்டெர்லைட்
ஆலையில் நடப்பது என்ன? எந்தவகையான தொழில்நுட்பத்தை இந்த ஆலை பயன்படுத்துகிறது? கழிவுகள்
எப்படி வெளியேற்றப்படுகிறது? இந்த கழிவுகள் மண்ணுக்குள் பாய்கிறதா? என்ற கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரியாமல் பத்தாம் பசலித்தனமாக போலி போராளிகள் உரைக்கும் செய்திகளை மக்கள் நம்பி
விடுகிறார்கள்.
ஸ்டெர்லைட்
ஆலையானது விதிமுறைகளை மீறி குடியிருப்பு பகுதியில் இருந்து 6 கி.மீ. தூரத்திற்குள்
அமைந்திருக்கிறது என்பது போலி போராளிகளின் குற்றச் சாட்டு. ஆனால் மாசுக்கட்டுப்பாட்டுத்
துறை அறிவுறுத்தலின்படி மோசமான கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் குடியிருப்பு பகுதியில்
இருந்து 25 கி.மீ. தொலைவிற்கு அப்பால் அமைய வேண்டும் என்பதே. அப்படி பார்த்தால் ஸ்டெர்லைட்
ஆலையானது எந்த கழிவுகளையும் நேரடியாக கடலிலோ, மண்ணிலோ வெளியேற்றுவதில்லை. டிஜிட்டல்
ஆலை என்ற தரத்துடன் எந்த கழிவையும் வீணாக்காமல் மறுச்சுழற்சி என்ற அடிப்படையில் மதிப்பு
கூட்டப்பட்ட அமிலங்களாகவும், இன்ன பிற உபரி பொருட்களாகவும் மாற்றி பலதரப்பட்ட தொழிற்சாலைகளுக்கு
விநியோகித்து வருகிறார்கள்.
ஸீரோ
வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற தொழில்நுட்ப அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் சல்ப்யூரிக்
ஆசிட் எனப்படும் கந்தக அமிலமாகவும், பாஸ்போரிக் அமிலமாகவும் மாற்றி கெமிக்கல் ஆலைகளுக்கும்,
உரத்தொழிற்சாலைகளுக்கும் மூலப்பொருட்களாக அனுப்பப்படுகின்றன. இவை நாம் அன்றாடம் பயன்படுத்தும்
டிடர்ஜென்ட் பொருட்களில் தொடங்கி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்கள் வரை அனைத்தின்
பயன்பாட்டிலும் கலந்திருக்கிறது என்பதையும், இந்த அமிலங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டால்
மக்கள் பயன்படுத்தும் எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விடும்
என்பதையும் மக்கள் உணரவில்லை.
தற்போது
ஸ்டெர்லைட் ஆலை மூடலால் சல்ப்யூரிக் ஆசிட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில்
29 கெமிக்கல் ஆலைகளும், அதனைச் சார்ந்த 150க்கும் மேற்பட்ட உபரி தொழிற்சாலைகளுகளும்
மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது சல்ப்யூரிக் ஆசிட் தட்டுப்பாட்டால்
இதற்கு முன்பு ஒரு டன் ரூ.4000 என்ற அளவில் கிடைத்து வந்த அமிலம் தற்போது ரூ.12 ஆயிரம்
முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்தியாவில் தாமிரத்தின் இருப்பு இருக்கும்
வரை அதன்விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்றாலும், இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்படும் போது கடும் விலையேற்றத்தை சந்திக்க வேண்டி வரும். அப்போது இந்தியர்களின் கைகளில்
தலைக்கு ஒன்றாக புழங்கும் மொபைல் போன் தொடங்கி அனைத்து எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் பொருட்களின்
விலையும் ஒன்றுக்கு நான்கு மடங்கு உயர்வை சந்திக்க வேண்டிய அபாயமும் ஏற்படும் நாள்
வெகு தொலைவில் இல்லை. விவசாயத்திற்கு பயன்படுத்தும் மின்மோட்டார்களை கூட வாங்க முடியாத
விலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். இவை அனைத்துமே இந்தியாவின் உற்பத்தி திறனை கடுமையாக
பாதித்து உலகச்சந்தையில் நாட்டின் வளர்ச்சிக்கு கொடூரமான பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை
மறுப்பதற்கில்லை.
ஆனால்
வடமாநிலத்தில் இருந்து வந்து சேலத்தில் குடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டு பசுமைப்போராளி
என அடையாளப்படுத்திக் கொள்ளும் பியூஷ்மானூஷ் என்ற அதிமேதாவி தாமிரத்தின் விலையில் எந்த
மாற்றமும் ஏற்படவாய்ப்பில்லை என கூறுவது மக்கள் மத்தியில் கேலிக் கூத்தாக பார்க்கப்
படுகிறது. தொழிற்சாலையின் தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் மற்றொரு கோமாளி
நித்யானந்த் ஜெயராம் என்பவர் தன்னை சமூக போராளி என அடையாளப்படுத்திக் கொண்டு வாய்க்கு
வந்தபடியெல்லாம் வீடியோ பதிவுகளை தயாரித்தும், பத்திரிக்கையாளர்களை சந்தித்தும் உளறிக்
கொட்டி வருகிறார். இவர்களுக்குத் தேவையெல்லாம் உல்லாச வாழ்க்கை, தட்டுப்பாடற்ற பணப்புழக்கம்.
இதற்காக இவர்கள் நாட்டைக்கூட எதிரிநாடுகளுக்கு காட்டிக் கொடுக்க தயங்க மாட்டார்கள்.
இந்த பணியைத்தான் தற்போது கூட செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில்
கூட இந்த நித்யானந்த ஜெயராம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அமர்ந்து கொண்டு போலியான
புள்ளி விவரங்களை கம்ப்யூட்டரில் தயாரித்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எஸ்ஓ2 வெளியாவது
பற்றியும், இதற்கான புகைப்போக்கி சரியான அளவில் அமைக்கப்படவில்லை என்பது பற்றியும்
தனது பாணியிலேயே பொய்யான தகவல்களுடனும், பவர் பாயிண்ட் படங்களுடனும் வெளியிட்டார்.
பத்திரிக்கையாளர்கள் பலவாறான கேள்விகளைக் கேட்டு அவரைத் துளைத்து திணறடித்து விட்டனர்.
ஒரு கட்டத்தில் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடிச் சென்று
விட்டார்.
கலவரத்தில்
இவர்களது பங்களிப்பை தூத்துக்குடி மக்கள் மறந்துவிடவில்லை. கலவரத்திற்கு பின்னர் தூத்துக்குடி மக்களை நேருக்கு
நேர் சந்திக்க திராணியில்லாமல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உட்கார்ந்து கொண்டு தூத்துக்குடியைப்பற்றி
மணிக்கணக்கில் பேட்டி கொடுக்கிறார்கள். பணத்தை வாரிக்கொட்டி உள்ளூரில் உள்ள முக்கிய
நபர்களையும், வக்கீல்கள் சிலரையும் விலைக்கு வாங்கி வைத்துள்ள இந்த போலி போராளிகள்
தூரத்தில் இருந்தபடியே காய் நகர்த்தி ஆலையை திறக்காமல் இருப்பதற்கான வழிகளை மேற்கொண்டு
வருகிறார்கள். அரசியல்வாதிகளிடமும் இந்த பொய்யை புள்ளி விவரமாக கொடுத்து தங்களது கூட்டத்திற்கு
அழைத்து வந்து மக்களை திசை திருப்பி வருகிறார்கள்.
தூத்துக்குடி
விவகாரத்தில் தற்போது இரண்டு குழுவாக பிரிந்து தங்களது திட்டங்களை போலி போராளிகள் செயல்படுத்த
தொடங்கியுள்ளனர். நித்யானந்த் ஜெயராம் தனது போலி வாதங்களை உறுதி செய்வதற்காக ஓய்வு
பெற்ற அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், நீரி ஆய்வுக்குழுவின் முன்னாள் அதிகாரிகள்
என அழைத்து வந்து பொய்யான புள்ளி விவரங்களை உண்மையென சித்தரிக்க முயற்சிகள் மேற்கொண்டு
வருகிறார். மற்றொரு பக்கத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வக்கீல்கள் அரிராகவன்,
வாஞ்சிநாதன் ஆகியோர் ஏற்பாட்டில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணை குழு
என்ற பெயரில் வக்கீல் ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம் என்ற பெயரில் வக்கீல் திலக்
ஆகியோர் தலைமையில் ஒரு குழுவுமாக இயங்க தொடங்கியுள்ளனர்.
ஸ்டெர்லைட்
ஆலையில் இருந்து பல கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் அமைத்து நேரடியாக கழிவுகள் கடலில்
கலக்கப்படுவதாக அர்த்த ஆதாரமற்ற வாதத்தை முன் வைத்து பொதுமக்கள், மீனவ மக்கள் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் இந்த குழுவினர். அதிநவீன தொழில்நுட்பத்துடன் கழிவுகளை
வெளியேற்றாமல் ஆலை இயங்குவதை மறைத்து விடுகிறார்கள். மண்ணுக்குள் உலோகத்திலான ராட்சத
அறைகள் கட்டப்பட்டு அதில் கழிவுகளை தேக்கி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்படுகிறது
என்ற உண்மையை அப்படியே மறைத்து பல கி.மீ.தூரத்துக்கு நிலம் மாசு பட்டிருப்பதற்கு ஸ்டெர்லைட்
ஆலையே காரணம் என்ற பொய்யை விதைத்து வைத்திருக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாடு மற்றும்
சுற்றுச்சுழலியல் துறை ஆகியவற்றின் தொடர் கண்காணிப்புகளையும், விதிமுறைகளையும் மீறி
ஆலையில் இருந்து எஸ்ஓ2 அளவிற்கு அதிகமாக வெளியேறுகிறது என்ற கட்டுக் கதைகளை எந்தவித
ஆதாரமும் இன்றி வதந்திகளாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆலை
மூடப்பட்ட பின்னரும் தூத்துக்குடி நகரத்தின் எஸ்ஓ2 பரவல் அளவீடு இன்னமும் அப்படியேதான்
இருக்கிறது என்பது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல். ஆனாலும்
தங்களது வதந்தி பரப்புரையை கைவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
”எப்பொருள்
யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற வள்ளுவத்தின் அடிப்படையில்
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை. ஆலையின் செயல்பாடுகளை நேரில் உற்றுநோக்கினால்
இந்த தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட முடியும். ஆலை நிர்வாக தரப்பில்
எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் ஆலையை பார்வையிடலாம் என அறைகூவல் விடுத்த
பின்னரும் தயங்கிக் கிடப்பது மக்கள் தரப்பு பின்னடைவே. போலி போராளிகள் பேச்சை நம்பி
இந்தியாவின் பொருளாதாரத்தை தாங்கும் ஒரு தொழிலை முடக்கி வைத்திருப்பது அறமும் அல்ல,
தர்மமும் அல்ல. வேலையிழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கண்ணீர் என்பதை உணர வேண்டும்.
சமூக
வலைதளங்களிலும், உண்மைக்கு புறம்பாகவும் வதந்திகளை கிளப்பி மக்களை அச்சுறுத்துபவர்கள்
மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தூத்துக்குடி
மாவட்டத்தை எப்போதும் பரபரப்பாகவே வைத்துக் கொள்ளும் நோக்கில் தேவையற்ற வதந்திகளை கிளப்பி
பணத்திற்காக வேலை செய்யும் கூட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல்.
------------------------------

No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.