என் வீட்டில் கடந்த 3 வருடங்களாக ஜிக்கி என்ற பெயர் கொண்ட பாசமிகு பிராணி
வளர்கிறது. என் மீது அளவு கடந்த பாசம் அதற்கு. என்னை பொறுத்தவரை அதற்கு
எப்போதுமே சிறப்பு கவனிப்புதான். தற்போது என் வீட்டிற்கு புதிய
நாய்க்குட்டி வந்துள்ளது. புதிய வரவை ஜிக்கியால் சகித்துக்கொள்ள
முடியவில்லை. அதனுடைய உணவுத்தட்டில் வாய் வைக்க சென்ற குட்டியை ஆக்ரோஷமாக
தாக்கத்துடித்தது. ஆனால் நான் ஓடிச்சென்று காப்பாற்றி விட்டேன். ஒருவார
காலத்தில் தற்போது தாயும் பிள்ளையும் போல் விளையாட தொடங்கியுள்ளது கண்கொள்ளா காட்சி. இப்போது அதனுடைய தட்டில் சாப்பிட்டாலும் ஜிக்கி விலகி நின்று கொள்கிறது.
நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல. பால், டீ என எது கொடுத்தாலும் அசுர வேகத்தில் உட்கொள்ளும் பெரிய நாயின் நடவடிக்கையில் இந்த ஒரு வாரத்தில் பெரும் மாற்றங்கள். கிண்ணத்தில் பால் ஊற்றி வைத்தால் பெரிய நாய் அதனருகில் கூட செல்வதில்லை. குட்டிநாய்க்கு மொத்தமாக விட்டுக்கொடுத்து விலகி விடுகிறது.
ஐந்தறிவு கொண்ட நாய் கூட அடுத்த சந்ததிக்கு தனக்கு கிடைத்ததை அப்படியே அனுபவிக்க விட்டுச்செல்கிறது.
ஆனால் மனிதர்கள் தங்களது அடுத்த சந்ததிகளுக்கு எதை விட்டுச்செல்கிறார்கள்? சுத்தமான காற்று, வற்றாத நீராதாரங்கள், சேதப்படுத்தப்படாத இயற்கை வளங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் தான் அனுபவித்துவிட்டு அடுத்த சந்ததிகளுக்கு ஊனமானவற்றை சேதமானவற்றை விட்டுச் செல்வது நியாயமா? அடுத்தவர்களுக்கு சேரவேண்டியதை சுரண்டுவதில் அப்படி என்ன ஆனந்தம்?
ஐந்தறிவு ஜீவிகளிடம் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம் நல்ல விடயங்கள் இருக்கின்றன. கற்றுக்கொள்ளத்தான் ஆறறிவாளர்களுக்கு மனம் வரவேண்டும்!!!

No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.