சமீபத்தில்
மதிமுக பொதுச் செயலாளர்கள் வைகோ வெளியிட்ட அறிக்கை விவசாயிகளை அதிர்ச்சியில் உறையச்
செய்தது. அப்படி என்ன அறிக்கை அது? விவசாயத்திற்கு தேவையான உரங்கள் மற்றும் இடுபொருட்களின்
விலை தாறுமாறாக ஏறிவிட்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை
காக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். உரங்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றெல்லாம் காட்டமாக அறிக்கை தயார் செய்து வெளியிட்டார்.
இதில்
வேடிக்கை என்னவென்றால் இதே வைகோதான் உரங்களுக்கு பெருமளவில் மூலப்பொருட்களை அளித்து
வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நச்சுகார நாசகார ஆலை என்றெல்லாம் வசனங்களை பொழிந்து
அதனை எதிர்த்து கோஷமிட்டவர். இவரது கொள்கைதான் என்ன? கோட்பாடுதான் என்ன? என சாமானியர்களை
வியக்க வைக்கிறது. ஒரு பக்கத்தில் மூலப்பொருள் கொடுக்கும் ஆலையை மூட போராட்டத்தை கையில்
எடுப்பது… மறு பக்கத்தில் உரங்கள் உள்ளிட்ட உற்பத்தி பொருள் தட்டுப்பாடு, விலையேற்றம்
என போராடுவது… இவை மக்களை ஏமாற்றும் செயல் என அவருக்கு தெரியவில்லையா?
விவசாயத்திற்கு
தேவையான உரங்களை தயாரிப்பதற்கு பாஸ்போரிக் அமிலம் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த பாஸ்போரிக் அமிலத்தை பெருமளவில் உற்பத்தி
செய்து அவற்றை குறைந்த விலைக்கு உரத் தொழிற்சாலைகளுக்கு அளித்து வந்தது ஸ்டெர்லைட்
ஆலைதான். தற்போது பல போராட்டங்களுக்கு பின்னர் அந்த ஆலையின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு
விட்டது. இதனால் தாமிரத்தின் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆலையில்
உற்பத்தியாகும் உபரி தயாரிப்புகளான கந்தக அமிலம், பாஸ்போரிக் அமிலம் ஆகியவற்றின் உற்பத்தியும்
பாதிக்கப்பட்டுள்ளதால் கெமிக்கல் ஆலைகள், உரத்தொழிற்சாலைகளும் தங்களது உற்பத்தியை பெருமளவில்
நிறுத்திக் கொண்டு விட்டன. இதனால் இருப்பில் உள்ள பொருட்களும், குறைந்த அளவில் உற்பத்தியாகும்
உரங்களும் தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது. சாமானியர்களுக்கும் எளிதில் புரியும் இந்த
தொழில் யுக்தி ஏனோ சட்டத்தில் மெத்தப்படித்த வைகோவுக்கு புரியவில்லை…
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டங்களின் பிரதான தொழில் விவசாயம்…. இந்த விவசாயத்திற்கு தேவையான
இடுபொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் தூத்துக்குடியில் அமைந்துள்ளன. இங்குள்ள
ஒரு கூட்டம் தொழிற்சாலைகளுக்கும், மக்களின் பொருளாதாரத்திற்கும் எதிராக வெளிநாட்டு
சக்திகளிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு தொழில் வளர்ச்சியை முடக்க கங்கணம் கட்டிக் கொண்டு
செயல்படுகின்றனர். இந்த விவரம் புரியாமல் பத்தாம்பசலித்தனமான அரசியல்வாதிகளும் குய்யோ
முறையோவென கூச்சலிட்டு வருகிறார்கள்.
விவசாய
விளைபொருட்களின் விலை உயர்ந்தால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் என பொருளாதார
நிபுணர்கள் எச்சரித்தால், நித்யானந்த் ஜெயராம், பியூஷ்மானூஷ் போன்ற போலி போராளிகள் அது எப்படி விலை உயர்வு சாத்தியம்
என கூறும் கூற்றுக்களை அப்படியே அச்சுப்பிசகாமல் ஊடகங்கள் ஒளிபரப்புகின்றன. ஏதோ பல
ஆராய்ச்சிகளை நடத்திய விஞ்ஞானிகள் போல இவர்கள் பேசுவதை விவரம் தெரியாத இளைஞர்களும்
சமூக வலைதளங்களில் வைரலாக்கி விடுகின்றனர். விளைவு படுமோசமாகி விடுகிறது. இவர்கள் போராளிகள்
அல்ல என்பதை அவர்கள் உணர்வதற்குள் அவர்கள் பன்னாட்டு சதி நிறுவனங்களிடம் கைக்கூலி வாங்கிக்
கொண்டு உல்லாச வாழ்க்கைக்குள் பிரவேசமாகி விடுகிறார்கள். மக்களை கலவரத்தில் இறக்கி
விட்டுவிட்டு காணாமல் போய் விடுகிறார்கள்.
தூத்துக்குடியில்
பசுமை தீர்ப்பாய ஆய்வுக்குழு வந்திருந்த போது, மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆலைக்கு
ஆதரவாக மக்கள் கூட்டம் பெருகியதை பொறுத்துக் கொள்ள முடியாத போலி போராளிகள் கூட்டம்
அந்த மக்களை அசிங்கமாக பேசி தாக்குதல் நடத்தி விரட்டி விட்டனர். இதனால் வேலையிழந்து
வருமானம் இழந்து வாழ்வாதாரத்தை தொலைத்தவர்கள் நியாயம் கேட்டு சென்னையில் உள்ள பசுமை
தீர்ப்பாயத்தில் 45 ஆயிரம் மனுக்களை குவித்தனர். இதனை பொறுத்துக் கொள்ள மாட்டாத போலி
போராளிகள் கூட்டம் தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 4.3 லட்சம்
மக்களிடம் கையெழுத்து இயக்கம் என்ற ஒன்றை தொடங்கி, பணத்தை கொடுத்து கையெழுத்து வாங்கி
வருகிறார்கள். கிராம் கிராமமாக முகாமிட்டு இந்த வேலையை நடத்தி வருகிறார்கள். மொத்தத்தில்
வைகோ முதலாய் போலி போராளிகள் வரை ஒழிக்க நினைப்பது தூத்துக்குடியின் தொழில்வளத்தை மட்டுமல்ல…
ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியையும்தான்… இவர்களுக்கு மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்…
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..!
No comments:
Post a Comment
Thank you for your valuable feedback.